Sex Education Season 4 Streaming On Netflix Read Details In Tamil

Estimated read time 1 min read

ஹாலிவுட் படங்களுக்கும் தொடர்களுக்கும் இந்திய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகம். அந்த வகையில், இந்தியர்கள் பலரின் வரவேற்பினை பெற்ற ஆங்கில படைப்புகளுள் ஒன்று, Sex Education. இந்த தொடரின் நான்காவது சீசன் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. 

செக்ஸ் எஜுக்கேஷன் தொடர்: 

பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் பல விதமான தொடர்களும் படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில், பலரும் விரும்பி பார்க்கும் ஒரு டிராமா, செக்ஸ் எஜுக்கேஷன். பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் மாணவர்களை முக்கிய கதாப்பாத்திரங்களாக வைத்து இந்த கதை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர், டீன் செக்ஸ் காமெடி டிராமா பாணியில் எழுதப்பட்டுள்ளது. இதில் ஓட்டிஸ், மேவ், எரிக், ஆடம் போன்ற பல கதாப்பாத்திரங்கள் முக்கியமாக உள்ளன. 

நான்காவது சீசன்..

செக்ஸ் எஜுக்கேஷன் தொடரின் முதல் சீசன் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. அடுத்தடுத்த வருடங்களில் பிற 2 சீசன்கள் வெளியாகின. தற்போது இந்த தொடரின் நான்காவது சீசன் வெளியாகியுள்ளது. இதுவே, இத்தொடரின் கடைசி சீசனாகும். இந்த நான்காவது சீசனிற்காக ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இத்தொடர் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணியளவில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. 

மேலும் படிக்க | ‘3 idiots’ படத்தில் நடித்த பிரபல நடிகர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகினர்!

கதை என்ன..? 

மூர்டேல் என்ற பள்ளியில் படிக்கும் டீன் ஏஜ் மாணவர்கள் பலர், பாலியல் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு ஓட்டிஸ் என்ற மாணவன், அது குறித்த கல்வியை கற்றுக்கொடுத்து அவர்களது பிரச்சனைகளை சரி செய்கிறான். இதை தெரிந்து கொள்ளும் மேவ் என்ற மாணவி, அவனுக்கு வாடிக்கையாளர்களை பிடித்து தருகிறாள். இப்படி இவர்கள் தங்களது பாலியல் குறித்த போதனையை “Sex Therapy” தேவைப்படுவோருக்கு என்ற பெயரில் மறைமுகமாக பணம் வாங்கிக்கொண்டு ஆலோசனை கொடுக்கின்றனர். இது பள்ளி நிர்வாகத்திற்கு ஒரு கட்டத்தில் தெரிய வருகிறது. அதன் பிறகு நிகழ்வதும், பள்ளி மாணவர்களிடையே பாலியல் குறித்த விழிப்புணவர்வு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதையும் இந்த தொடரில் காண்பித்துள்ளனர். 

சிறப்பம்சங்கள்..

செக்ஸ் எஜுக்கேஷன் தொடரில் பாலியல் குறித்த விழிப்புணர்வு, பாலியல் இன்பம், பாலியல் தேவைகள், தன் பாலின ஈர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களை தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேலும், பலருக்கு பாலியல் சார்த்த அனுபவங்களில் இருக்கும் சந்தேகங்களையும் இதில் விவாதிக்கின்றனர். இந்த தொடரில், இளம் வயதினரிடையே ஏற்படும் உடலியல் மாற்றங்கள், உளவியல் மாற்றங்கள் ஆகியவையும் அலசப்படுகின்றன. 

மேலும் படிக்க | ‘குஷி’ திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்போது ரிலீஸ்..? முழு விவரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours