சீக்கிய முறைப்படி திருமணம் நடக்க இருக்கிறது. அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் டெல்லியில் நடந்தது. திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் ஏற்கெனவே டெல்லியில் தொடங்கி நடந்தது. டெல்லியில் நேற்று நடந்த இசை நிகழ்ச்சியில் பரினிதியின் சகோதரி பிரியங்கா சோப்ரா கலந்துகொள்ளவில்லை. இதில் பிரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா கலந்து கொண்டார்.

இதையடுத்து இன்று காலையில் திருமணம் செய்து கொள்ளப்போகும் தம்பதி உதய்ப்பூர் வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. திருமண சடங்குகள் உதய்ப்பூரில் உள்ள தாஜ் லேக் பேலஸ், தி லீலா பேலஸ் ஹோட்டல்களில் நடக்க இருக்கிறது. திருமணத்திற்காக இரண்டு ஹோட்டல்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. மும்பையில் உள்ள பரினிதி சோப்ராவின் வீடும் மின் விளக்குகளால் ஒளிர்கிறது. திருமணத்திற்கு ஏற்கெனவே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். பரினிதியின் பெற்றோர், உறவினர்கள், ராகவ் பெற்றோர் இன்று காலையிலேயே உதய்ப்பூர் வந்துவிட்டனர்.
+ There are no comments
Add yours