Ethirneechal Actress Haripriya Hospitalised | மற்றொரு துயரம்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்நீச்சல் நடிகை

Estimated read time 1 min read

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்நீச்சல் பிரபலம்: எதிர்நீச்சல் தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் துடுக்காக பேசியபடி சிறப்பான  நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஹரிப்பிரியா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எதிர்நீச்சல் தொடர்:
தமிழ் தொலைக்காட்சி தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, எதிர்நீச்சல் (Ethirneechal Serial). இந்த தொடரை திருசெல்வம் இயக்கி வருகிறார். பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளையும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் காண்பிப்பதே இந்த எதிர்நீச்சல் தொடர். இந்த சீரியலில் நந்தினி (Nandhini) எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகை ஹரிப்பிரியா (Actress Haripriya). சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் பற்றி தான் சின்னத்திரை வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனாலையே டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் மற்ற சீரியல்களை போல இல்லை என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

 

மேலும் படிக்க | மீண்டும் இணையும் மெட்ராஸ் காம்போ.. வெளியானது புதிய அப்டேட்

யார் ஹரிப்பிரியா?
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார் நடிகை ஹரிப்பிரியா, இருப்பினும் எதிர்நீச்சல் தொடர் தான் அவரை அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் கொண்டு சேர்த்து, எண்ணற்ற ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

எதிர்நீச்சல் தொடரில் குணசேகரனின் (Adhi Gunasekaran) இரண்டாவது தம்பியின் மனைவியாக நடிகை ஹரிப்பிரியா வருகிறார். இவரது துடுப்பான நடிப்புக்கு பலர் அடிமை என்றே கூறலாம். அவ்வளவு ஹரிப்பிரியாவின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி:
இந்நிலையில் தற்போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஹரிப்பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி தற்போது எதிர்நீச்சல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதற்கான காரணத்தை வெளியிடாமல், மருத்துவமனை படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் மருத்துவமனையில் தனக்கு ட்ரிப்ஸ் ஏற்றுவது போல் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்தனை செய்து வருகின்றனர்.

எதிர்நீச்சல் சீரியல் குழுவிற்கும் ரசிகர்களுக்கும் இடையிலான சந்திப்புக்குப் பிறகு ஹரிப்ரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எதிர்நீச்சல் மாரிமுத்து காலமானார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக இந்த சீரியலின் மையக் கதாபாத்திரமான குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து (Actor Marimuthu) காலமானார். மாரிமுத்துவின் திடீர் மறைவு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரு வட்டாரங்களையுமே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தக் கவலையில் இருந்து எதிர்நீச்சல் தொடர் ரசிகர்கள் தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்புதான் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் மருத்துவமனைக்கு சென்று இருந்த மாரிமுத்து அங்கேயே காலமானார். இதனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு இப்போது நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை என்பதும் அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பில்டர் கொலை வழக்கில் மார்க் மகன்கள் கைது: தவமாய் தவமிருந்து சீரியலில் அடுத்த டிவிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours