Thol Thirumavalavan Releases Indha Crime Thappilla Movie Poster

Estimated read time 1 min read

மதுரியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு மனோஜ் கிருஷ்ணசுவாமி அவர்களின் தயாரிப்பில் “இந்த கிரைம் தப்பில்ல” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார். 

படக்குழு:

“இந்த கிரைம் தப்பில்ல” திரைப்படத்தை எழுதி இயக்குனர் தேவகுமார் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் நடிகர்கள் ஆடுகளம் நரேன், சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் மற்றும் கதாநாயகி மேக்னா எலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குணச்சித்திர வேடங்களில் காமெடி நடிகர் வெங்கால்ராவ், முத்துக்காளை ஆகியோர் நடித்திருக்கின்றனர். 

இந்த படத்திற்கு பரிமளவாசன் இசையமைத்திருக்கிறார். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். முன்னணி பாடகர்களான பாடகர் பிரசன்னா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் பாடல்களை பாடி இருக்கின்றனர்.

மேலும் படிக்க | “சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?” ஊடகங்கள் மீது பாரதிராஜா காட்டம்..!

Indha Crime Thappilla

‘ஆடுகளம்’ நரேன்:

‘இந்த க்ரைம் தப்பில்ல’ படத்தில் சின்னத்திரை நடிகர் கமல் பாண்டி கமல் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியான முக்கிய கதாப்பாத்திரத்தில் ‘ஆடுகளம்’ நரேன் நடிக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள பல படங்களில் இவர் துணை கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். ‘ஆடுகளம்’ படம்தான் இவரது கதாப்பாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. அதிலிருந்து இவரை பலர் ஆடுகளம் நரேன் என்று அழைத்து வருகின்றனர். 

இவர், ‘இந்த க்ரைம் தப்பில்ல’ படத்தில் முதன் முறையாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சினிமா ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த Sex Education சீசன் 4 ஓடிடியில் வெளியீடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours