Jawan Box Office Collection Crosses 900 Crores Shah Rukh Khan Atlee

Estimated read time 1 min read

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள ஜவான் திரைப்படம், பாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனை குவித்து வருகிறது. 

தமிழ் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ஜவான். இந்த படத்தில் அவர், ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார். படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 7ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது. 

ஜவான் படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு..

தமிழில் வெகு சில படங்களை இயக்கி சில ஆண்டுகளிலேயே டாப்பிற்கு சென்ற இயக்குநர், அட்லீ. இவர், ஷங்கரிடம் உதவி இயக்குநராக எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். ராஜா ராணி படத்தில் தொடங்கி தற்போது ஜவான் படம் மூலம் பாலிவுட் வரை சென்று விட்டார். இந்த படத்திற்கு தமிழகத்தை விட பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

மேலும் படிக்க | பாலிவுட்டிலும் ஜெயித்தாரா அட்லீ..? ஜவான் படம் எப்படி..? முழு விமர்சனம் இதோ!

வசூல் விவரம்..

ஜவான் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வருகிறது. படத்தின் முதல் நாளே வசூல் உலகளவில் 80 கோடி வரை தொட்டது. வெளியாகி கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவை கொடுத்து வருகின்றனர். தற்போது ஜவான் படம் 907.54 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1000 கோடியை தொட்டு விடுமோ..! 

ஜவான் திரைப்படம், வெகு சில நாட்களில் 1000 கோடியை தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இதற்கு முன்பு வெளியான ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் உலகளவில் 1000 கோடி வரை வசூல் செய்தது. ஜவான் படத்திற்கு வட இந்திய ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்தால், பதான் படத்தின் வசூலை, ஜவான் படம் மிஞ்சிவிடும் என்று கூறப்படுகிறது. 

இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஜவான்..! 

ஜவான் திரைப்படம் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கிள் உள்ளது. குறிப்பாக, படம் வெளியான போது கூகுள் நிறுவனம், ஜவான் படத்தில் ஷாருக்கான் முகத்தில் சுற்றியிருக்கும் பிளாஸ்திரியை போன்ற டூலை வெளியிட்டது. இதையடுத்து, படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் தமிழ் மற்றும் இந்தியில் ட்ரெண்டிங்கிள் உள்ளன. தமிழில் ‘ஹையோடா’ பாடலுக்கும் இந்தியில் ‘சலேயா..’ பாடலுக்கும் ரசிகர்கள் பலர் நடனமாடி அதை ரீல்ஸ்களாக பதிவேற்றி வருகின்றனர். இதனால், இந்தியா முழுவதும் ஜவான் படத்தின் ஜுரம் அடித்து வருகிறது. 

மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்திற்காக அட்லீ வாங்கிய சம்பளம் இவ்வளவா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours