இக்குடிசைப்பகுதியில் இருந்து சிறுமி ஒருவர் பிரபல காஸ்மெடிக் பொருளுக்கு விளம்பர மாடலாக மாறியிக்கிறார். தாராவி குடிசைப்பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் போட்டி மூலம் குடிசைகளின் இளவரசியாக மலீஷா கார்வா என்ற சிறுமியைத் தேர்ந்தெடுத்தார். இப்போது 14 வயதாகும் அச்சிறுமி ஏழை குடும்பத்தில் பிறந்த ஆயிரக்கணக்கான பெண்களின் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.
தற்போது பாரஸ்ட் எஸ்சன்சியல்ஸ் என்ற காஸ்மெடிக் பிராண்டின் `தி யுவதி கலெக்ஷன்” விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மலீஷா இளம் வயதில் கண்ட கனவு நனவாகி இருக்கிறது. பின் தங்கிய பகுதியை சேர்ந்த பெண்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்து தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திலும், எங்கு இருந்தாலும் கனவை நிறைவேற்ற முடியும் என்பதை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் மலீஷாவின் படம் பாரஸ்ட் எஸ்சன்சியல்ஸ் விளம்பரத்தில் இடம் பெற்று இருப்பதாக அக்கம்பெனி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு அந்நிறுவனம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் மலீஷா ஒரு கடைக்குள் நுழைகிறார்.
+ There are no comments
Add yours