பாலிவுட் நடிகை ரஷாமி தேசாயிக்கு எதிராகத் தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அதில், ரஷாமியின் பெற்றோர் குறித்தும் சிலர் விமர்சனம் செய்து இருந்தனர். அதோடு ரஷாமி எவ்வாறு வாழவேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
அவர்களை கண்டிக்கும் விதமாக ரஷாமி தேசாய் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னைப் பற்றிய ட்ரோல்களை என்னால் புறக்கணிக்க முடியும். ஆனால் இதில் என் பெற்றோரை இழுக்கவேண்டிய அவசியம் என்ன?
வேலையில்லாதவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன்… தயதுசெய்து என் பெற்றோரை பற்றி பேசாதீர்கள். நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். இது எனது வாழ்க்கை. இச்சம்பவத்தை பார்க்கும்போது நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதிகள் என்று யாரையும் பொருட்படுத்தாமல் சோசியல் மீடியாவில் ட்ரோலிங் செய்யப்படுவது சர்வசாதாரணமாகிவிட்டதாகத் தெரிகிறது. இது மிகவும் ஆபத்தானது.
சோஷியல் மீடியாவில் என் வாழ்க்கையைப் பற்றி ஏதாவது சொல்கிறார்கள். அது என்னோடு நெருக்கமாக இருப்பவர்களின் வாழ்க்கையில் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் ஒரு ட்விட்டர் பயனாளி என் தாயை விமர்சித்து ட்ரோலிங் செய்திருந்ததை பார்க்க முடிந்தது. அதனால்தான் இந்த வீடியோவை வெளியிடவேண்டிய நிலை ஏற்பட்டது.
+ There are no comments
Add yours