ஆனால் கதையை முழுமையாகக் கேட்டுக்கொண்ட ஷாருக்கான், ஏற்கெனவே ‘டான்’, ‘டான் 2’ படங்களில் அனைத்தையும் நடித்து முடித்துவிட்டதாகவும், இனி இதில் மேற்கொண்டு நடிக்க எதுவும் இல்லை என்று கூறி டானாக தான் நடிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், தான் வேறு வகையான கதைகளில்தான் நடிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் ‘டான்’ படத்தில் நீங்கள் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்று ஷாருக்கானிடம் பர்ஹான் அக்தர் தெரிவித்திருக்கிறார். ‘ஜேம்ஸ் பாண்ட்’ கதாபாத்திரத்தில் வேறு வேறு நடிகர்கள் நடித்தாலும், படம் சிறப்பாக அமைவதைச் சுட்டிக்காட்டிய ஷாருக்கான், ‘டான்’ படத்தொடரும் அது போன்று சிறப்பாக அமையும் என்று வாழ்த்தியிருக்கிறார்.
பர்ஹான் அக்தர் பல முறை ஷாருக்கானைச் சந்தித்துப் பேசிய போதும் அவரை சம்மதிக்க வைக்க முடியவில்லை என்கிறார்கள். இதையடுத்து ‘டான் 3’ படத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக பர்ஹான் அக்தரே அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதோடு ‘டான் 3’ படத்தில் ரன்வீர் சிங்கை அறிமுகம் செய்யும் டீசர் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. புதிய டான் சகாப்தம் 2025ம் ஆண்டு தொடங்குவதாக பர்ஹான் அக்தர் அதில் தெரிவித்திருக்கிறார்.
+ There are no comments
Add yours