Indiana Jones and the Dial of Destiny: அமெரிக்காவுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்தியாவில் வெளியாகும்!

Estimated read time 1 min read

ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்கத்தில் ஹாரிசன் ஃபோர்டுடன் ஃபோப் வாலர்-பிரிட்ஜ், அன்டோனியோ பண்டேராஸ், ஜான் ரைஸ்-டேவிஸ், டோபி ஜோன்ஸ், பாய்ட் ஹோல்ப்ரூக் மற்றும் மேட்ஸ் மிக்கெல்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ (Indiana Jones and the Dial of Destiny).

அதிரடி ஆக்‌ஷன், சாகசம் எனத் தொல்பொருள் ஆராய்ச்சியைப் பின்னணியாகக் கொண்ட கதைக்களமாக 1981-ல் வெளியாகி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது ‘Raiders of the Lost Ark’ என்ற ஹாலிவுட் திரைப்படம். புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் இயக்குநரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இப்படத்தை இயக்கியிருந்தார்.

Indiana Jones படங்கள்

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பாகங்கள் ‘Indiana Jones and the Temple of Doom (1984)’, ‘Indiana Jones and the Last Crusade (1989)’ மற்றும் ‘Indiana Jones and the Kingdom of the Crystal Skull (2008)’ ஆகியவை ஹாலிவுட் மட்டுமல்லாமல் உலகளவிலும், குறிப்பாக இந்தியாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நான்கு படங்களையும் ஸ்பீல்பெர்க்கே இயக்கியிருந்தார்.

இதையடுத்து இதன் ஐந்தாவது மற்றும் இறுதிப் பாகமாக ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்கத்தில் ஹாரிசன் ஃபோர்டு நடிப்பில் ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளார். இப்படம் மேற்கத்திய நாடுகளில் இந்த ஜூன் மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதன் முந்தையப் பாகங்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இந்திய ரசிகர்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. இந்தப் படம் மட்டுமல்ல ஸ்டார் வார்ஸ், அவதார், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், மார்வெல், டிசி படைப்புகள் எனப் பல ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்திய ரசிகர்களுக்கென இந்த ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ திரைப்படம் ஹாலிவுட்டுக்கு ஒரு நாள் முன்னதாகவே,அதாவது ஜூன் 29ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு எனப் பல மொழிகளில் இந்தியத் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இப்படிப் பல ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே வெளியாகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours