‘’கூட்டிக் கழிச்சுப் பாரு, கணக்குச் சரியா வரும்’ என ’அண்ணாமலை’ படத்தில் ராதாரவி பேசுகிற ஒரு டயலாக் வருமே, அதைச் சுட்டிக்காட்டிப் பீடிகைப் போட்டனர் சிலர்.
‘’கடந்த சீசன்ல ரச்சிதா கலந்துக்கறதுக்கு முன்னாடி, அவங்க கூட ஒரு சீரியல்ல ஜோடியா நடிச்சார் விஷ்ணு. அந்த வகையில் ரச்சிதாவுடன் ஏற்கெனவே இவருக்கு அறிமுகம் உண்டு. அதேபோல ரச்சிதாவும் பிக் பாஸில் அவரது நெருங்கிய தோழியாக இருந்த ஷிவினும் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்ததும் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளில் விஷ்ணுவும் கலந்துகொண்டார். ரச்சிதா சமீபத்தில் புதிதாகக் கார் வாங்கிய போது கூட உடன் சென்று அவருக்கு வாழ்த்துச் சொல்லியிருந்தார் விஷ்ணு.
பிக் பாஸைப் பொறுத்தவரைப் பழைய போட்டியாளர்கள் அடுத்து வரும் நிகழ்ச்சிகளுக்குத் தங்களுக்கு வேண்டியவர்களைச் சிபாரிசு செய்வதென்பது வழக்கமானதுதான். “ராபர்ட் மாஸ்டரை நான்தான் சிபாரிசு செய்தேன்’ என வனிதா விஜய்குமார் பேட்டி கொடுத்திருந்தது நினைவிருக்கலாம். இப்போது அந்தக் கணக்கு விவரம் புரிகிறதா? ஆக, ரச்சிதா, ஷிவின் இருவருடைய சிபாரிசு இதில் நிச்சயம் இருக்கு’’ என்கிறார்கள் அவர்கள்.
சில மாதங்களுக்கு முன் ரச்சிதாவுக்கும் அவரது கணவர் தினேஷுக்கும் இடையிலான பிரச்னை பெரிதான போது, ரச்சிதாவின் தோழியும் டப்பிங் ஆர்ட்டிஸ்டுமான ஜி.ஜி., தினேஷ் மீது போலீஸ் புகார் கொடுத்தாரில்லையா, அந்தப் புகார் மனுவில் விஷ்ணுவின் பெயரும் இருந்ததையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். அதாவது ’விஷ்ணுவையும் தினேஷ் மிரட்டினார்’ எனப் புகாரில் குறிப்பிட்டிருந்தார் ஜி.ஜி.
+ There are no comments
Add yours