“பீஸ் கட்ட முடியாம கஷ்டப்பட்டிருக்கேன், அதுக்காகவே ஒழுங்கா படிக்கணும்னு நினைச்சேன்!” – மோனிஷா பிளசி | Cooku with Comali fame Monisha Blessy talks about her education

Estimated read time 1 min read

ஸ்கூலில் இருந்தே பீஸ் கட்ட முடியாம கஷ்டப்பட்டிருக்கேன். கடைசி நேரத்தில் எப்படியோ கடன் வாங்கி பீஸ் கட்டிடுவாங்க. லாக்டௌன் வந்தப்ப கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. அப்ப இளங்கோ சார்தான் பீஸுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணினார். நான் ஒர்க் போக ஆரம்பிச்சதும் நானே பீஸ் கட்டிட்டிருந்தேன். என்னோட ஒரே ஒரு மைண்ட்செட் என்னவாக இருந்ததுன்னா நம்மள படிக்க வைக்கிறதுக்கு பலர் கஷ்டப்படுறாங்க.. அதுக்கு நாம நல்லா படிக்கணும் என்பது மட்டும்தான் இருந்தது. டெஸ்ட் நாள்களில் ஏதாவது புரோகிராம் இருந்தாக்கூட டெஸ்ட் முடிச்சிட்டு வந்துடுறேன்னுதான் சொல்லுவேன். எப்போதெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்போதெல்லாம் படிச்சிட்டுதான் இருப்பேன். 

மோனிஷா பிளசி

மோனிஷா பிளசி

ரெண்டு மாசம் முன்னாடி இளங்கோ சார் போன் பண்ணி, ’நீ யுனிவர்சிட்டி முதல் ரேங்க் வாங்கியிருக்க… வாழ்த்துகள்மா’ன்னு சொன்னார். யுனிவர்சிட்டியில் இருந்து உனக்கு போன் வரும்னும் சொன்னார். அவர் சொன்னதும் வீட்ல எல்லாம் சொல்லிட்டேன். அவங்க எல்லாருக்கும் செம சந்தோஷம்! பலர், ’என்ன, யுனிவர்சிட்டி ரேங்க்கெல்லாம் வாங்கிட்டு மீடியாவில் இருக்க’ன்னு கேட்பாங்க… ’ஏங்க, நான் படிச்சதே அதுக்குதாங்க’ன்னு சொல்லணும் போல இருக்கும்! 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours