நந்தா, சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி பிரபலமான இவர். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது அருண் விஜய்யை வைத்து `வணங்கான்” படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் பாலாவின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி தவறான செயல்களில் ஈடுபட்டுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில இயக்குநர் பாலா புகார் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் பாலா தரப்பில் இருந்து வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், “ எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம். எனது பெயரில் மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக் கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
+ There are no comments
Add yours