இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் படங்களுக்கு மட்டுமின்றி பாலிவுட் படங்களுக்கு இசையமைத்து இருந்தாலும் அவர் ஒரேடியாக பாலிவுட் பக்கம் செல்லாமல் தொடர்ந்து தமிழ் மற்றும் பாலிவுட் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் மும்பையில் குடியேற வாய்ப்புக்கள் அதிக அளவில் இருந்தது. ஆனால் அவர் மும்பையில் குடியேறவில்லை.
இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது, “மாபியா கலாச்சாரம் காரணமாகவே மும்பையில் குடியேறவில்லை. நான் மும்பையில் குடியேறப்போவதாக நினைத்து ஆந்திராவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவர் 1994ம் ஆண்டு சென்னையில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில் பகுதியில் உள்ள வீட்டில் குடியேறும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார்.
நான் அவரைப்பார்த்து சிரித்தேன். அந்த நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்த சூழ்நிலை எனக்கு பிடிக்காததால் அங்கு குடியேறவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துவிட்டேன். பாலிவுட் இயக்குநர் ஒருவர் என்னிடம் மும்பையில் குடியேறும்படி கேட்டுக்கொண்டார். அதோடு இந்தி கற்றுக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார். வட இந்தியர்கள் அதிக அளவில் அன்பு செலுத்துவதால் இந்தி தெரிந்திருக்கவேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார். ஆனால் மும்பையில் மாபியா கலாச்சாரம் இருந்ததால் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டேன்.
இங்கிலாந்தில் 6 ஆண்டுகள் இருந்தேன். ஆனால் எனது மனைவி 3 மாதம் தான் இருந்தார். அதற்குள் இந்தியாவிற்கு திரும்பவேண்டும் என்று சொன்னார். அமெரிக்காவில் இருக்கலாம் என்று நினைத்து அங்கு சென்றோம். அங்கு சொந்தமாக வீடு கூட வாங்கினோம். ஆனால் அங்கிருந்து தாயகம் திரும்பிவிட்டோம்.
கமலஹாசனிடம் ஹாலிவுட் படம் தயாரிக்கும்படி கேட்டுக்கொண்டேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஹாலிவுட் சென்று படம் தயாரித்திருக்கவேண்டும்” என்று தெரிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் சுற்றினாலும் தனது குடியிருப்பை நிரந்தரமாக சென்னைக்கு மாற்றிக்கொண்டார்.
+ There are no comments
Add yours