இந்நிலையில், விக்னேஷ் சிவனின் மனைவியும் நடிகையுமான நயன்தாரா அவரது கணவருக்கு ரொம்பவே உருக்கமாக ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நயன்தாரா கூறியிருப்பதாவது, “என்னுடைய ஆசீர்வாதத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த சிறப்பான நாளில் நான் உங்களைப் பற்றி எழுதியே ஆக வேண்டும். ஆனால், நான் எழுதத் தொடங்கினால் சில விஷயங்களை குறிப்பிட்டுக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளமாட்டேன் என நினைக்கிறேன். நீங்கள் என் மீது பொழியும் அளவுகடந்த அன்பிற்கும் நம் உறவின் மீது வைத்திருக்கும் மரியாதைக்கும் நான் நிறையவே நன்றிக் கடன் பட்டுள்ளேன்.
+ There are no comments
Add yours