தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.
சீதா ராமன் : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதா மூன்று பெண்களையும் கடத்தி மகாவுக்கு ஷாக் கொடுக்க வேறு வழியில்லாமல் மீராவை விட்டு விட மகா முடிவெடுத்தாள்.
மீராவை ரிலீஸ் செய்யும் மகா
இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் சேது மீரா எங்க இருக்கா என்று கேட்க மேல தான், யாரும் போகாத ரூமில் கட்டி வைத்து இருப்பதாக சொல்லி மேலே சென்று மீராவை ரிலீஸ் செய்ய அவள் எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம். நான் இப்படியே இருந்துடுறேன் என்னை விட்டுடுங்க என்று சொல்லி ஷாக் கொடுத்து ரூமுக்கு வருகிறாள்.
ரெஜிஸ்டர் ஆபிசில் காத்துக் கொண்டிருக்கும் ராமும் சத்யனும்
இதனால் அர்ச்சனா அப்படியெல்லாம் சொல்லாத மீரா என்று பதற மகா கோபமாகவே பேசி கொண்டிருக்க சீதா ஏதோ செய்திருப்பதால் தான் நம்மை விட்டு இருக்காங்க என்பதை புரிந்து கொள்கிறாள். மறுப்பக்கம் ரெஜிஸ்டர் ஆபிசில் ராமும் சத்யனும் காத்துக் கொண்டிருக்க சீதா ஆட்டோவில் வந்து இறங்குகிறாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் மகா மீரா அக்காவை கூட்டிட்டு வந்துடுவாங்க, உங்க ஆசைப்படி எல்லாரோட பிளெஸ்ஸிங்குடன் உங்க கல்யாணம் நடக்கும் என்று சொல்கிறாள்.
பிறகு மீராவை தயார் செய்து மகா அர்ச்சனா, சேது ஆகியோர் ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்து இறங்க விஷால் எனக்கு கிடைக்காத மீரா யாருக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசப்படுகிறான், சத்யன், மீரா என இருவரையும் கொல்ல முடிவெடுக்கிறான். அடுத்து மகா வேண்டா வெறுப்பாக உள்ளே வர சீதா இன்னமும் உங்க பொண்ணுங்க என்கிட்ட தான் இருக்காங்க என்று சொல்லி மிரட்டுகிறாள்.
மீரா இவங்க ஆசிர்வாதம் எனக்கு வேண்டாம் என்று சொல்ல அப்படினா நாங்க கிளம்பறோம் என்று மகா சொல்ல சீதா கல்யாணம் முடியாமல் போக கூடாது என்று கேட்டு போடுகிறாள். ரெஜிஸ்டர் வந்ததும் எப்படி கல்யாணம் பணிக்க போறீங்க? தாலியா இல்ல மோதிரமா என்று கேட்க சத்யன் தாலி தான் என்று பாக்கெட்டில் கை வைக்க தாலி காரில் இருக்கும் நியாபகம் வந்து அதனை எடுத்து வர செல்கிறான்.
மேலும் படிக்க | Pass மார்க் வாங்கியதா ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம்..? ட்விட்டர் விமர்சனம் இதோ..!
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழும் சத்யன்
தாலியை எடுத்து கொண்டு உள்ளே வர கிளம்பிய சத்யனை விஷால் காரில் அடித்து தூக்க ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுகிறான் சத்யன், இந்த விஷயம் அறிந்து எல்லாரும் பதற்றத்தோடு ஓடி வருகின்றனர்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?
சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்..’ அழகு நாயகி ரம்யா பாண்டியனின் புகைப்படங்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours