விஜய் டிவியில் ஒளிபரப்பான `கலக்கப் போவது யாரு’, `அது இது எது’ நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.
நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வந்தவர். அதைத்தொடர்ந்து சீரியலிலும் நடித்தார். கடைசியாக, ‘கலர்ஸ் தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘வள்ளி திருமணம்’ தொடரில் நடித்தார். சின்னத்திரையில் காட்டிய நகைச்சுவை திறமைகள் இவருக்கு சினிமா வாய்ப்புகளையும் தர, தற்போது ஓரிரு படங்களிலும் நடித்து வருகிறார்.
பொறுப்பான மகனாக வீட்டுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டு தனது தம்பி, தங்கைக்கு அண்ணன் என்கிற முறையில் செய்ய வேண்டிய கடமையை முடித்துவிட்டு தனது திருமணம் குறித்து யோசித்திருக்கிறார். நண்பர்கள் மூலம் அறிமுகமான மரியா என்பவருடன் இன்று அவருக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
சின்னத்திரை, வெள்ளித்திரையைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
வாழ்த்துகள் நாஞ்சில் விஜயன் – மரியா!
+ There are no comments
Add yours