சன்னி தியோல் நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து 1993ம் ஆண்டு டர் (Darr) என்ற படத்தில் நடித்தார். அந்த நேரத்தில் ஷாருக்கான் திரைப்படத்துறைக்குப் புதியவராக இருந்தார். ஆனால் சன்னி தியோல் பிரபலமாக இருந்தார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் சன்னி தியோல் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. அதோடு இருவரும் கடந்த 16 ஆண்டுகளாகப் பேசிக்கொள்ளவும் இல்லை. ஆனால் இப்போது இருவரும் சமதானமாகிவிட்டனர்.
இது குறித்துப் பேட்டியளித்த சன்னி தியோல், “ஷாருக்கான் எனக்கு போன் செய்து ‘கதார் 2’ பட வெற்றிக்கு வாழ்த்து சொன்னார். ஷாருக்கான் படத்தைப் பார்க்கப் போகும் முன்பு எனக்கு போன் செய்து வாழ்த்து சொன்னார். தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். நான் அவருக்கு நன்றி சொன்னேன். அவரது மனைவி மற்றும் மகனிடமும் பேசினேன்” என்று தெரிவித்திருந்தார்.
+ There are no comments
Add yours