2005ஆம் ஆண்டு சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படத்திற்கும், பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்த கொடுமைகளுக்கு முடிவு நாம் ஒருவருக்கொருவர் நிகழ்த்தும் அணைப்பில்தான் இருக்கிறது என்று பேசிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்திற்கும் 58 மதிப்பெண்களை விகடன் வழங்கியிருக்கிறது. சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் படம் சமீபத்தில் வெளியானதில் 57 மதிப்பெண்களைப் பெற்றிருந்தது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ திரைப்படம் 57 மதிப்பெண்களையும், இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ திரைப்படம் 56 மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறது.
அன்பு, மன்னிப்பு ஆகிய இரண்டின் மூலம், எத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமும் புன்னகையை ஏற்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய ‘அருவி’ திரைப்படமும், நிலம் எங்கள் உரிமை, கல்விதான் எங்கள்ஆயுதம் என்று எடுத்துரைத்த ‘அசுரன்’ திரைப்படமும் 55 மதிப்பெண்களையும், மாரி செல்வராஜ் இயக்க தனுஷ் நடிப்பில் வெளியான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பற்றிப் பேசிய ‘கர்ணன்’ திரைப்படம் 54 மதிப்பெண்களையும், 1989ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற பார்த்திபனின் ‘புதிய பாதை’ திரைப்படம் 53 மதிபெண்களையும் பெற்றிருக்கிறது.
+ There are no comments
Add yours