அமெரிக்காவின் முதல் அணுசக்தி ஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானி ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து கிறிஸ்டோபர் நோலன் ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தை இயக்கி இருக்கிறார்.
ஜூலை 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இந்தப் படத்தில் நாயகனும், நாயகியும் நெருக்கமாக இருக்கும்போது ‘உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்’ என்ற பகவத் கீதையின் வரிகள் படிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பல ஹிந்து அமைப்புகள் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும், இப்படியான காட்சிகளை ஏன் தணிக்கை குழு நீக்கவில்லை என்றும் கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
இதுபோன்ற எதிர்ப்புகளைத் தொடர்ந்து அந்தக் காட்சிகளை நீக்க தணிக்கை குழுவிற்கு தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தி இருக்கிறார்.
“இந்தக் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதை உணராமல் தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியது எப்படி?” என்ற கேள்வியை எழுப்பிய அவர், சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கும் படியும், இந்தக் காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த தணிக்கை குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours