69 வயதில் 3-வது திருமணம்; யோகா பயிற்சியாளரை மணக்கும்; 'WWF' ஸ்டார் ஹல்க் ஹோகன்!

Estimated read time 1 min read

அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘WWF’வில் 1980-90 களில் நட்சத்திர குத்துச்சண்டை வீரராகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஹல்க் ஹோகன்.

ஐந்து முறை WWF சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிட்னஸ் தொடர்பான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிக் கோப்பைகளைக் குவித்து வருகிறார். 1983-ல் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய லிண்டா கிளாரிட்ஜை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் புரூக் (35), நிக் (32) என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 26 ஆண்டுகள் ஒன்றாக இருந்த இவர்களது திருமண உறவில் சிறுசிறு பிரச்னைகள் எழ 2009-ல் இருவரும் பரஸ்பரமான முறையில் விவாகரத்து பெற்றனர்.

ஹல்க் ஹோகன்

அடுத்த ஆண்டே(2010) ஹோகன், பிரபல மேக்கப் ஆர்டிஸ்டான ஜெனிபர் மெக்டேனியலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெனிபருடனான வாழ்வும் கொஞ்ச காலம்தான் நீடித்தது. 10 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் 2021-ல் விவாகரத்துப் பெற்றனர். பிரிவின் நிமித்தமாக ஜெனிபருக்கு விலையுயர்ந்த காரையும் பரிசளித்திருந்தார்.

இதையடுத்து ஹோகன்; பிட்னஸ், யோகா, பளுதூக்கும் போட்டிகள் என பிட்னஸ் தொடர்பான பொழுதுபோக்குகளிலும், போட்டிகளிலும் ஆர்வம் காட்டி வந்தார். பின்னர், 69 வயதாகும் ஹல்க் ஹோகன், யோகா பயிற்சியாளராக இருக்கும் ஸ்கை டெய்லி(45) என்பவரைக் காதலிக்கத் தொடங்கினார். ஒரு பார்ட்டியின் மூலம் அறமுகமாகிக்கொண்ட இருவரும் காதலர்களாக மாறினார்கள்.

ஹல்க் ஹோகன்-ஸ்கை டெய்லி

இந்நிலையில் சமீபத்தில் தங்களது நண்பர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹல்க் ஹோகன், தனது மூன்றாவது திருமணம் பற்றி பேசியுள்ளார். ஹல்க் ஹோகன்-ஸ்கை டெய்லி இவருவம் நீண்ட நாட்கள் காதலித்து வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours