Tamannah: `ரோஹித்தாக விஜய் சேதுபதி; ஹர்திக்காக தனுஷ், ஜடேஜாவாக..?’ – இது தமன்னாவின் சாய்ஸ்! | Tamannah about casting choices for Cricket Players Biopics

Estimated read time 1 min read

ஆசியக்கோப்பைப் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. இந்நிலையில் இந்திய அணி இன்று வங்கதேசத்துடன் மோதி வருகிறது. ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டதால் இந்திய அணி இன்று முக்கியமான வீரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அடுத்தக்கட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஆடி வருகிறது.

Tamannah

Tamannah
Screenshot from Star Sports

இந்தப் போட்டியின் இடைவெளியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். அதில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. வீரர்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களின் பயோபிக்கில் யாரெல்லாம் நடிக்கலாம் என்று கேட்கப்பட்டது.

அதற்கு தமன்னா, “ரோஹித் சர்மாவின் பயோபிக்கில் விஜய் சேதுபதியும் ஹர்திக் பாண்டியா பயோபிக்கில் தனுஷூம் ஜடேஜாவின் பயோபிக்கில் அல்லு அர்ஜுனும் நடித்தால் நன்றாக இருக்கும்” எனக் கூறியிருந்தார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours