அதுவரைக்கும் பொழுதும் போன மாதிரி இருக்கும். நாலு காசும் சேர்த்துக்கலாமேங்கிற ரீதியில பேசி அவர் மனசைக் கரைச்சிருக்கறதாச் சொல்றாங்க. இவங்களுடைய ஆர்வத்தைப் பார்த்துட்டுதான் கணவர் வேற வழியில்லாம மனசு மாறி நடிக்கச் சம்மதிச்சிட்டதாத் தெரியுது” என்றார்கள்.
சரி. பிரியங்கா நடிக்கவிருக்கும் ‘நள தமயந்தி’ தொடரில் ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா? விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகிவரும் ‘கண்ணே கலைமானே’ தொடரிலிருந்து சமீபத்தில் வெளியேறிய நந்தாவேதான்.
‘சண்டைக் காட்சியில் நடிக்கும்போது அடிபட்டதாகவும் அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாகவும் சொன்னாரே, அதுக்குள் இன்னொரு சேனல்ல எப்படி ஹீரோவா’ என்கிறார்கள். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும்
தொடர்ந்து சில நாள்கள் ஒய்வுக்குப் பிறகு ‘நள தமயந்தி’ தொடரின் ஷூட்டிங்கில் அவர் கலந்துகொள்வார்’ என்றும் சொல்கிறார்கள் அவரது தரப்பினர்.
நள தமயந்தி தொடர் வரும் அக்டோபர் 2 முதல் ஒளிபரப்பாக உள்ளதாம்.
+ There are no comments
Add yours