ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, சிம்பு நடிப்பில் ‘AAA’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது விஷாலை ஹீரோவாக வைத்து ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை எடுத்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சினிமா விகடன் யூ- ட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பகிர்ந்து கொண்ட சில சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!
விஷால் ‘புரட்சி தளபதி’-ங்குற பட்டத்தை சமீபத்துல வந்த படங்கள்ல கொண்டு வரல. ஆனா, இந்த படத்துல மறுபடியும் பயன்படுத்திருக்கீங்க. அதைப் பத்தி விஷால் என்ன சொன்னாரு?
படம் ஸ்டார்ட் பண்ணிட்டோம். படம் சூட்டிங் போயிட்டு இருந்தது. டீசர் ஒன்னு ரெடி பண்ணி, எல்லோருக்கும் அனுப்பிருந்தோம். எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. அப்போ தான், டைட்டில் கார்டும் ரெடி பண்ணினோம். விஷால் அண்ணாவோட அடையாளமே ‘புரட்சி தளபதி’ தானே. கொஞ்சம் நாளாவே பயங்கர கமர்ஷியலா ‘சண்டக்கோழி, திமிரு’ மாதிரி இருக்குற படங்களை அவர் பண்ணல. ஆனா, ஆக்ஷ்ன் படங்கள் நெறைய பண்ணினாங்க. ஆனா, இப்படியொரு கதைக்களத்துல இன்ட்ரஸ்டிங்கா புது ஜானர் படங்கள் அவர் பண்ணல. இப்படிப் பண்ணும் போது, எல்லாமே புதுசா இருக்கட்டும்னு இதைக் கொண்டு வந்தோம்.
விஷால் அண்ணா முதல்ல வேணாம்னு சொன்னாரு. அப்புறம், “ரொம்ப வருஷம் கழிச்சு இப்படி பண்ணுறோம். உங்களுக்கும் புதுசா இருக்கு. உங்க ஃபேன்ஸ்களுக்கும் ஒரு பாசிட்டிவா இருக்கும். இப்படி பண்ணா பெட்டரா இருக்கும்னு தோணுது’ அப்படின்னு நான் சொன்னேன். விஷால் அண்ணாவோட கேரக்டர் என்னனா, ஒருத்தரை நம்பிட்டா முழுசா நம்பிடுவாரு. அது மாதிரி, ‘நீ என்ன சொன்னாலும் ஓகே டா’ ன்னு சொல்லிட்டாரு. அப்படித்தான் இது வந்தது.
அதே மாதிரி ஜி.வி.பிரகாஷோட டைட்டில்ல, ‘GV Prakash Massacre-ன்னு போட்டுருந்தீங்க. படத்துல மியூஸிக் எப்படி வந்துருக்கு?
படம் உண்மையாவே ஒரு Massacre ஃபீல்ல தான் இருக்கும். மியூசிக்ல அவர் பயங்கரமா தெறிச்சுட்டாரு. இந்த Massacre ஐடியா கூட என்னோட அசோசியேட் டைரக்டர் ஹரிஷ் தான் கொடுத்தான். நெறைய பெயர் யோசிச்சோம், அவன் கொடுத்த ஐடியாதான் இது. படத்துக்கும் பயங்கரமா ஃபிட் ஆகும். நீங்க படமா பார்க்கும் போது, மியூஸிக் தான் ரொம்ப ஸ்ட்ராங்கா தூக்கிக் கொடுக்கும். எனக்கு மியூசிக் ரொம்ப பிடிக்கும். ஆனா, அந்த அளவுக்கு மியூஸிக் பத்தித் தெரியாது. படத்தை மியூசிக்கலா தான், கட் பண்ணிருப்போம். டீஸர், டிரெய்லரும் கூட அப்படிதான் கட் பண்ணிருப்போம்.
‘பஞ்சுமிட்டாய் சேலை கட்டி’ பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் பாட்டு படத்துலயும் இருக்கு. அதுல நெப்போலியன் சார் டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். அதே மாதிரி ‘அடியே மனம் நில்லுனா நிக்காதடி’ பாட்டு என்னோட ஆல் டைம் ஃபேவரைட். அப்புறம், படத்துல இன்னொரு பாட்டு இருக்கு. அதுவும் என்னோட ஆல் டைம் ஃபேவரைட் தான். இதுவும் ரொம்ப சர்ப்ரைஸா இருக்கும்.
இப்போ, AI மூலமா நெறைய பேரை ரீ-கிரியேட் செய்றாங்க. ‘சில்க் ஸ்மிதா’ கேரக்டர் படத்துல எப்படி ரீ-கிரியேட் பண்ணீங்க?
AI-லாம் இப்போ தான் வந்தது. நாங்க படம் ஸ்டார்ட் பண்ணும் போது AI இல்ல. இதைப் பண்ணுறதுக்கு பயங்கரமா கஷ்டப்பட்டோம். அதைப் பண்ணுறதுக்கு யாருமே ரெடியா இல்ல. “இதை அச்சீவ் பண்ணவே முடியாது, தப்பாகிடும்” அப்படின்னு சொன்னாங்க. நான் எழுதிட்டேன், கதையிலேயே இருக்கு. இது ஒரு முக்கியமான எபிசோட். 80-90ஸ் -ங்கிறத தாண்டி, ஒரு இடத்துல அந்த கேரக்டர் வரும். இது எழுதுறப்போ, எனக்கு எவ்ளோ எக்ஸைட்மென்ட் கொடுத்துச்சோ, அதே அளவு கதையை கேக்குறப்போ எல்லோரும் எக்ஸைட் ஆனாங்க. அதை எடுத்துட்டு வரணும்னு ரொம்ப போராடுனோம். நம்ம ஊருலயே பிரசாத் லேப்ல சூப்பரா எடுத்துக் கொடுத்துட்டாங்க. முழு கிரெடிட்டும் அவங்களுக்கு தான் போகும். நாம இது தான் வேணும்னு சொன்னோம். ப்ரொடியூசர் அதுக்கான பட்ஜெட் கொடுத்துட்டாங்க. இவ்ளோ சப்போர்ட் சிஸ்டம் இருக்கும் போது, நாங்க அதை அச்சீவ் பண்ணிட்டோம்னு நெனைக்குறேன்.
செல்வராகவன் சாரோட பெர்பார்மென்ஸ் எப்படி இருக்கு. படத்துல அவரோட கேரக்டர் பத்தி சொல்லுங்க?
படம் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணி ஒருவாரம் கழிச்சு தான், செல்வா சாரை மீட் பண்ணுனோம். படத்துல முக்கியமான கேரக்டர் ஃபோன். அந்த ஃபோனை அசோசியேட் பண்ணுன கேரக்டர் தான், சிரஞ்சீவி கேரக்டர். சிரஞ்சீவினா, சாகாவரம் தானே. இந்த மாதிரி கேரக்டர் இருக்கும் போது, யாரு பண்ணுனா நல்லாருக்கும்னு ஒரு பயங்கர தேடுதல் நடந்துச்சு. ரொம்ப நாளா போச்சு. கோ-டைரக்டர் எங்க அப்பா தான், செல்வா சார் இருந்தா எப்படி இருக்கும்னு சொன்னார். ‘சூப்பரா இருக்கும், நல்லா இருக்கும். பண்ணுவாங்களான்னு கேட்டுப் பாப்போம்’ன்னு சொன்னேன். 4-5 நாள் தான் கேட்டோம். ஆனா, 8-10 நாள் கிட்ட அவரை வச்சி ஷூட் பண்ணோம். அதுவொரு இன்டரஸ்டிங்கான எபிசோட் தான். பயங்கர நடிகன் அவரு. அவர் சிரிச்சி என்ஜாய் பண்ணி யாரும் பார்த்தது இல்ல. சீரியஸா இருக்குற செல்வா சார் மாதிரி இல்லாம, ஃப்ரீயா இருக்குற ஆளா பார்க்கலாம்.
நெல்சனுக்கு ‘ஜெயிலர்’, அட்லிக்கு ‘ஜவான்’. இந்த ரெண்டு படம் பண்ணுறதுக்கும் விஜய் சார் தான் காரணம்னு சொல்லிருந்தாங்க. அதே மாதிரி, நீங்க ‘மார்க் ஆன்டனி’ பண்ணுறதுக்கும் அஜித் சார் மோட்டிவேட் பண்ணாருன்னு சொல்றாங்க. அதைப் பத்தி சொல்லுங்க?
லோகேஷ் பிரதர், நெல்சன் பிரதர், ரெண்டு பேருமே ஏற்கெனவே பயங்கர சக்சஸ் கொடுத்து ப்ரூஃப் பண்ணுன டைரக்டர்ஸ். அவங்கள விஜய் சார் மோட்டிவேட் பண்ணிருக்காரு. அவங்களும் இதை நெறைய இன்டர்வியூல சொல்லிருக்காங்க. அந்த நேரத்துல, நான் ரெண்டு படம் தான் எடுத்துருக்கேன். ரெண்டாவது படம், சிம்பு சார் படம் சரியா போகல. அப்போ ‘நேர்கொண்ட பார்வை’ படத்துல நடிக்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சது. அதைத் தாண்டி, அஜித் சார் கூட பழகுறதுக்கும் வாய்ப்பு கிடைச்சது. சார்கிட்ட ஒரு அபாரமான பாசிட்டிவ் எனர்ஜி இருக்கு. அவரோட எனர்ஜி என்மேலயும் பட்டுச்சு. ஒரு பையன், வாழ்க்கையில சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் ரொம்ப ஹேப்பி ஆகிடுவான். அவனுக்கு, ‘இதைவிட பெருசா சந்தோஷப்படலாம், இதை விட பெருசா ஒன்னு பண்ணலாம்’ன்னு ட்ரை பண்ணும் போது அது சரியா வரல.
அதனால, என்ன ஆச்சுனா ‘அந்த சைடே இனி போகக் கூடாது. ரொம்ப சின்னாதாவே சந்தோஷப்பட்டுக்கலாம்.’ அப்படின்னு ஒரு எண்ணம் வந்துடுச்சு. அந்தப் பையன் ஒரு கிங்கை மீட் பண்ணுறான். அப்போ அந்த கிங், ‘சின்னதுக்கு ஆசைப்படாத. பெருசுக்கு ஆசைப்படு. பரவால்ல ட்ரை பண்ணு’ அப்படின்னு சொல்லுறாரு. இதுல அந்த சின்ன விஷயத்துக்கு ஆசைப்பட்ட பையன் நான். அந்த கிங்கும், கிங் மேக்கரும் அஜித் சார். ‘உனக்கு இருக்குற எனர்ஜிக்கு உன்னால பெருசா பண்ண முடியும்’ இது தான் அவர் கொடுத்த தன்னம்பிக்கை.
வாழ்க்கையில அம்மா, அப்பாவை தவிர நம்மள யாருமே மோட்டிவேட் பண்ண மாட்டாங்கன்னு நினைச்சுட்டு இருப்போம். அதைத் தாண்டி, ஒருத்தரோட வார்த்தைகள் ரொம்ப ஸ்ட்ராங்கா மனசுல போய் ஆழமா பதிஞ்சது. நானும் அதை பயங்கர சீரியஸா எடுத்துக்கிட்டேன். சரி ஓகே, இதுல இருந்து நாம வேற மாதிரி படம் பண்ணனும். நாம எதுக்காக சினிமாவுக்கு வந்தமோ, அதுக்கான ஓடனும்னு முடிவு பண்ணி, எடுத்துட்டு வந்ததுதான் இந்தப் படம். ‘மார்க் ஆண்டனி’-யோட ரிசல்ட் எப்படி இருந்தாலும், என்னைய மோட்டிவேட் பண்ணி, என்னோட ஜானரையே மாத்தி, இவ்ளோ பெரிய படம் பண்ண வைச்சது அஜித் சார் தான்.
துக்கு அவருக்கு எப்போதுமே நன்றி தெரிவிச்சுக்குறேன். பேனர், கட் அவுட் வச்சிட்டு இருந்த பயங்கரமான அஜித் சார் ஃபேன் நான். இப்படி இருக்கும் போது, அவரை மீட் பண்ணுனதே பெரிய விஷயம். அவர் கூட இருந்த 25-30 நாட்கள்ல, நான் கத்துக்கிட்ட விஷயத்தை வாழ்க்கையில கரெக்ட்டா கொண்டு வந்தாலே போதும்.
மேலும், இந்தப் பேட்டியில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். முழு வீடியோக்கான லிங்க் கீழே!
+ There are no comments
Add yours