Karthigai Deepam Update As on 14th September 2023 | கார்த்திகை தீபம்: தீபாவுக்காக அபிராமியிடம் பேசிய கார்த்திக், அதிர்ச்சி கொடுத்த ஜானகி!

Estimated read time 1 min read

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (Zee Tamil TV) திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ஒரு சிலவற்றை மட்டுமே ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். அப்படி ரசிகர்கள் பலர் விரும்பி பார்க்கும் சீரியல்களுள் ஒன்று, கார்த்திகை தீபம். இந்த தொடர் முதல் எபிசோடில் இருந்து தற்போது வரை பல விருவிருப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. இன்றைய எபிசோடிலும் இதில் பல சம்பவங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாமா..? 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ஐஸ்வர்யாவை சந்தித்து என்ன இந்த முறையும் உங்க பிளான் வேஸ்ட் ஆகிடுச்சா என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்க இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

இதனைத் தொடர்ந்து இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோடில், ஐஸ்வர்யா நட்சத்திரா கண் விழித்தது தெரிந்து ஹாஸ்பிடல் வர அவள் எனக்கு கார்த்தியை எப்படியாவது அடையணும், அந்த வீட்டுக்குள்ள திரும்பவும் நுழையணும் என்று சொல்ல ஐஸ்வர்யா இப்படியொரு பிளான் போட்டு கொடுத்தது தெரிய வருகிறது. அடுத்ததாக கார்த்திக் அபிராமியிடம் சாயங்காலம் கோவில் திருவிழாவில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்பும் போது இவங்க நல்லவங்க கிடையாது, ஆனால் தீபா அப்படி இல்லை. அவ ரொம்ப நல்லவள், ஏன் இப்போ இப்படி வேணாம்னு சொல்லிட்டு போனானு எனக்கு தெரியல என்று சொல்லி கிளம்புகிறான். 

மேலும் படிக்க | என்னை ஏற்றுக் கொள் என கெஞ்சும் கார்த்திக்! முடிவு என்னிடம் இல்லை யமுனா பதில்

அதனை தொடர்ந்து கார்த்திக், மைதிலி ஊரை நோக்கி வந்து கொண்டிருக்க திருவிழா ஏற்பாடுகள் தடபுடலாக நடந்திருக்க தர்மலிங்கம் வீட்டில் எல்லாரும் கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். தீபாவும் பூஜைக்கு தேவையான பொருட்களை எடுத்து கட்டைப்பையில் வைத்து கொண்டிருக்க ஜானகி நீ எதுக்கு வர? நாலு பேர் நீ தான் கார்த்தியை வேணாம்னு சொல்லியாமேனு கேட்டு எங்களை அசிங்கப்படுத்தவா என பிடித்து திட்டி விடுகிறாள். 

பிறகு கார்த்திக் மைதிலி வீட்டிற்கு வந்து விட எல்லாரும் திருவிழாவுக்கு கிளம்ப தீபா மட்டும் வீட்டு வாசலிலேயே நிற்க கார்த்திக் நீங்க வரலையா என்று கேட்க தீபா நான் வீட்டை பார்த்துக்கறேன் என்று சொல்ல கார்த்திக் நீங்களும் வாங்க என்று சொல்லி அழைத்து செல்கிறான். மறுபக்கம் ரூபாஸ்ரீ மற்றும் கோகிலா ஆகியோரும் திருவிழாவுக்கு கிளம்புகின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. 

மேலும் படிக்க | தமிழா தமிழா மேடையை மிரள வைத்த சிறுவன்! வைரலாகும் புதிய ப்ரமோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours