“`இந்தியா’ என்ற பெயரை `பாரத்’ என மாற்றினால் இந்தப் பிரச்னை வரும்!” – அனுராக் காஷ்யப் சொல்வது என்ன? | Anurag Kashyap talks about India – Bharat debate

Estimated read time 1 min read

தமிழ் ரசிகர்களுக்கு நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் ‘மகாராஜா’ படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் இயக்கிய ‘கென்னடி’ திரைப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அரசியல் குறித்தும் சினிமா சர்ச்சைகள் குறித்தும் வெளிப்படையாக தன் கருத்துகளைத் தெரிவிப்பவர். இந்நிலையில் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அனுராக் காஷ்யப், இந்தியா முழுவதும் விவாதப்பொருளாகியுள்ள ‘இந்தியா – பாரத்’ சர்ச்சையைக் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்

இதுகுறித்து பேசிய அனுராக் காஷ்யப், “‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என்பதாக அரசு ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டு மாற்றிவிடலாம். ஆனால், மக்கள் தங்களின் பாஸ்போர்ட், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி ஆவணங்கள் எனப் பல ஆவணங்களில் ‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்றவேண்டியிருக்கும். இதற்காக அரசு, மக்களின் நான்கு வருட வரிப்பணத்தைச் செலவிடுவார்கள். இதனால், மீண்டும் மக்கள்தான் கஷ்டப்பட வேண்டியிருக்கும். மக்களுக்குthதான் இது பெரிய வேலையாக இருக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours