இந்த சீசன்லயும் ரூல் ஃபாலோ பண்ணாதவங்களுக்கா அல்லது நாமினேஷன் பட்டியல்ல இடம் பிடிக்கிறவங்களுக்கா… அந்த வீடு யாருக்குனு இன்னும் முடிவாகலை.
அதேநேரம் பெண்களை மட்டும் தனியா பிரிச்சு ஒரு வீட்டுல தங்க வைக்கிறது சாத்தியமில்லை. நார்மலான பிக் பாஸ் வீட்டுலயே காதல் மலராதா அதன் மூலம் கன்டென்ட் கிடைக்காதான்னு நினைக்கிறவங்க எப்படிப் போட்டியாளர்களை ஆண் பெண் எனத் தனியாப் பிரிச்சு வைப்பாங்க?
அதேபோல அந்த இரண்டாவது வீட்டுக்குத் தனியாக ஒரு பெண் பிக் பாஸ் இருப்பார்னு ஒரு பேச்சும் சமூக வலைதளங்கள்ல போச்சு. ஆனா, அதுவும் உண்மையில்லைங்கிறாங்க.
அதேநேரம் ஷாக்கான இன்னொரு தகவல் அந்த வீடு தொடர்பா போயிட்டிருக்கு. அதாவது எந்தவிதமான வசதியும் இல்லாத அந்த வீட்டை ஒரு பாழடைஞ்ச வீடு மாதிரி காட்டி, அங்க ஒரு அமானுஷ்யமான குரல் கேட்கற மாதிரி செய்யப் போறதாகவும் ஒரு தகவல் ஓடிட்டிருக்கு.
அதாவது சிம்பிளாச் சொன்னா ’பேய் வீடு’ மாதிரி காட்டலாமோனு தெரியுது. தப்பு செய்ற போட்டியாளர்களை இங்க தங்க வச்சா நல்லா கன்டென்ட் கிடைக்குமில்லையா!’’ என்கிறது ஒரு சோர்ஸ்.
+ There are no comments
Add yours