பார்பி குழந்தைகளுக்கான பொம்மையாக இருந்தாலும், ஒரு ஆண் மைய சமூகத்தால் ஆண் பார்வைக்காகப் படைக்கப்பட்டது போலவே பார்பியின் உருவமைப்பு உள்ளது. ஆண் குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் `gi joe’ போன்ற பொம்மைகள். அவை பொம்மைகள் அல்ல `ஆக்ஷன் பிகர்கள்’ எனச் சொல்லப்படுகின்றன. அவை போர், மீட்புப் பணிகள் என ஏதாவது செய்யும்போது, பார்பி பொம்மையை அழகாக அலங்கரித்து வைத்துக் கொள்ளவேண்டும் ஏனெனில் அழகாக இருப்பது தாண்டி பெண்கள் செய்யவேண்டியது எதுவுமில்லை. இப்படி பல விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
90-களில், `கணக்கு கடினமாக இருக்கிறது!’ என்று உச்சரிக்கும் பார்பி பொம்மையை மட்டேல் நிறுவனம் தயாரித்தது பெரும் எதிர்ப்பலைகளைச் சந்தித்தது. இப்படி இருந்த பார்பி எப்படி ஒரு பெண்ணிய சின்னமாக உருமாறியது என்றால் காரணம் மட்டேல் நிறுவனத்தின் இன்க்ளூசிவான மார்க்கெட்டிங் தான்.
முதலில் லத்தீன் நாட்டவர் போன்ற பார்பி வெளியானது அதைத் தொடர்ந்து அமெரிக்க-ஆப்ரிக்க இன பார்பி, இந்திய பார்பி எனப் பல நாடுகளைச் சேர்ந்த பார்பிகளை உருவாக்கியது மட்டேல் நிறுவனம். தற்போது 22 தோல் நிறங்களிலும், 94 முடி நிறங்கள், 5 உடல் அமைப்புகளிலும் பார்பி உற்பத்தி செய்யப்படுகிறது. `கணக்கு வராது!’ என்று சொன்ன பார்பி இப்போது மருத்துவர், பொறியாளர், அதிபர் என 200-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபடுவது போல் இப்போது உற்பத்தி செய்யப்படுகிறது. `Barbie can be anything’ என்றானது.
+ There are no comments
Add yours