அமெரிக்க இசைக்கலைஞரும், பாப் பாடகருமான இவரின் இசை ஆல்பங்கள் அதிகளவில் விற்று சாதனை படைத்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது குணமடைந்து வரும் மடோனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “நான் உயிருடன் இருப்பது எவ்வளவு அதிர்ஷ்டம் என்பதைப் புரிந்துகொண்டேன். குடும்பங்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பே சிறந்த மருந்து. மருத்துவமனையிலிருந்து வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. என்னால் இப்போது அந்த அனுபவத்தைப் பற்றி சிந்திக்க முடிகிறது. இக்கட்டான சூழ்நிலையில் பிள்ளைகள் என்னுடன் இருந்தனர்.
+ There are no comments
Add yours