சென்னை: நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்டு விதிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று (செப்.13) நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டன. இந்த நிலையில் கூட்டத்தில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு பேருக்கும் ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டது. நடிகர் சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார்கள் அளித்தும் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்டு விதிக்க முடிவு செய்யப்பட்டது.
+ There are no comments
Add yours