Actor Marimuthu: `எதிர்நீச்சல்’ மாரிமுத்து திடீர் மரணம் – மாரடைப்பால் உயிர் பிரிந்தது! | Serial and Cinema Actor Marimuthu passed away

Estimated read time 1 min read

நடிகர் மாரிமுத்துவின் சொந்த ஊர் தேனி மாவட்டம். எனவே உடலை அங்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருக்கிறார்கள். தற்போது ‘எதிர் நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரனாக மக்கள் மனதில் ரீச் ஆகியிருந்தாலும் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் மாரிமுத்து. இயக்குநராகவும் சில படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராகும் கனவோடுதான் அவர் சென்னைக்கே வந்திருந்தார் என்பதையும் அவரே பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

`எதிர்நீச்சல்' மாரிமுத்து

`எதிர்நீச்சல்’ மாரிமுத்து

நிறையப் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடித்து கவனத்தை ஈர்த்தவர், சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்திலும் குறிப்பிடத்தகுந்த வேடத்தில் நடித்திருந்தார். பேட்டிகள், ரியாலிட்டி ஷோக்களிலும் வெளிப்படையாகப் பேசும் அவரின் தன்மை, ஆஃப் ஸ்க்ரீனிலும் அவருக்கு நிறைய ரசிகர்களை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours