ஜீ தமிழ்: தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகிறது, மேலும் சிறப்பு பண்டிகை தினங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலமாக மக்களுக்கு அந்நாளை மகிழ்ச்சிகரமாக மாற்றுவதிலும் ஜீ தமிழ் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி:
இந்தியர்களின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்னவெல்லாம் ஸ்பெஷலான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
சிறப்பு பட்டிமன்றம்:
காலை 8.30 மணி முதல் 9.45 மணி வரை சுகி சிவம் தலைமையில் “இளைய தலைமுறை மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்களா? இல்லையா?” என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது. இதில் தமிழின் முன்னணி பேச்சாளர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.
‘பத்து தல’ திரைப்படம்:
சிறப்பு பட்டிமன்றத்தை தொடர்ந்து 9.45 மணி முதல் 1 மணி வரை சூப்பர் ஹிட் படமான பத்து தல என்ற திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. ‘ஜில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் இது. இந்த படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | அட்லீ மனைவி செய்த காரியம் அதுவும் கீர்த்தியுடன், வைரலாகும் வீடியோ
காதர்பாஷா என்கிற முத்துராமலிங்கம்:
பத்து தல படத்தை தொடர்ந்து மதியம் 1 மணி முதல் 4 மணி வரை ஆர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமான காதர்பாஷா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக சித்தி இட்னானி நடித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழும் அரசியல் கதை களத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது.
நட்சத்திர ஜோடிகள்:
காதர் பாட்ஷா என்கிற முத்திராமலிங்கம் படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஜீ தமிழ் நட்சத்திர ஜோடிகள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ஜீ தமிழ் பிரபலங்கள் பங்கேற்கும் கலகலப்பான நிகழ்ச்சியாக இந்த ஷோ ஒளிபரப்பாக உள்ளது. ஜீ தமிழின் புத்தம் புதிய திரைப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகளுடன் விநாயகர் சதுர்த்தி திருநாளை கொண்டாட தயாராகுங்கள்.
மேலும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் டாப் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours