நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. மும்பையில் காலை 5 மணிக்கே முதல் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜவான் படம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ஷாருக்கான் கடந்த சில நாள்களுக்கு முன்பு வைஷ்ணுதேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். கடந்த 5 – ம் தேதி திருமலை திருப்பதி பாலாஜி கோயிலுக்கு நடிகை நயன்தாரா மற்றும் மகள் சுஹானாவுடன் சென்று வழிபட்டார்.
இது இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. சன்னி முஸ்லிமின் பிரதான அமைப்பான ராஸா அகாடமியின் தலைவர் செய்யத் நூரி இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், இஸ்லாம் சிலை வழிபாட்டை அனுமதிப்பதில்லை.
இஸ்லாம் மதத்தின் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர் அல்லாவின் முன்பு மட்டுமே தலை வணங்க வேண்டும். நடிகர்கள் மத நம்பிக்கையில் ஈடுபாடு இல்லாதவர்களாக இருக்கின்றனர். சில நடிகர்கள் இந்து கடவுள்களை வழிபட்டு ஆர்த்தியும் எடுக்கின்றனர். இதனை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஷாருக்கான் திருப்பதிக்குச் சென்று வந்ததனால் முஸ்லிம் வாலிபர்கள் மத்தியில் அது தொடர்பாக பாதிப்பு இருக்காது.
அவர்கள் தங்களது மத நம்பிக்கையில் உறுதியாக இருப்பார்கள். ஷாருக்கான் ஒரு நாத்திகராகவே தோன்றுகிறார். அவருக்கு மதம் ஒரு பொருட்டல்ல” என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours