Quentin Tarantino – Bruce Willis: 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறதா இந்த வெற்றிக் கூட்டணி?!

Estimated read time 1 min read

‘ஜாங்கோ அன்செயிண்டு’, ‘தி ஹேட்ஃபுல் எய்ட்’, ‘டெத் ப்ரூஃப்’, ‘கில் பில்’, ‘பல்ப் ஃபிக்ஷன்’, ‘ஜாக்கி பிரவுன்’, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’, ‘தி இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’, ‘ரிசர்வாயர் டாக்ஸ்’ போன்ற திரைப்படங்கள் மூலம் புகழ்பெற்ற இயக்குநராக வலம்வருபவர் ஹாலிவுட் இயக்குநர் குவென்டின் டாரன்டினோ. அதிரடி ஆக்‌ஷன் பார்முலா மற்றும் வித்தியாசமான மேக்கிங் மூலம் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர்.

இவர் முன்னதாக தன் வாழ்நாளில் மொத்தம் பத்து படங்கள் மட்டுமே இயக்கவிருப்பதாகக் கூறியிருந்தார். அதன் பிறகு ஓய்வு பெற்றுவிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அவர் இயக்கத் திட்டமிட்டிருக்கும் அடுத்த படம் 10வது படம் என்பதால் அதுவே இவரின் கடைசி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாரன்டினோ – புரூஸ் வில்லிஸ்

‘The Movie Critic’ என இப்போதைக்குப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தற்போது இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான புரூஸ் வில்லிஸ் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. அவருக்கு ஏற்கெனவே டிமென்ஷியா பாதிப்பு உள்ள நிலையில் அவரால் இனி நடிக்கவே முடியாது என அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். இதனால் அவர் எப்படி டாரன்டினோ படத்தில் நடிப்பார் என்பது புரியாத புதிர்தான்.

புரூஸ் வில்லிஸ் ஏற்கெனவே டாரன்டினோவின் ‘பல்ப் ஃபிக்ஷன்’ படத்தில் நடித்தவர். இப்படம் அதன் திரைக்கதை அமைப்பிற்காக உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற படைப்பு. அதன் பிறகு இந்தப் படத்தின் பாதிப்பில் பல மொழிகளில், பல படங்கள் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்ப் ஃபிக்ஷன் படக்குழு

சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாலும் டாரன்டினோவின் கடைசிப் படம் இது என்பதாலும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இப்படம் அடுத்த ஆண்டு 2024-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours