இப்ப அவருக்கு கிடைச்சிருக்க வேண்டிய அங்கீகாரம் ரொம்ப நாளைக்கு முன்னாடியே கிடைச்சிருக்கணும். இத்தனை வருஷம் அவர் பட்ட கஷ்டத்துக்கு இப்ப தான் பலன் கிடைச்சிட்டு இருந்தது. அதுவும் இப்ப போயிடுச்சு. புகழின் உச்சத்தில் இருக்கும்போதே உசுரு போகிறதை என்னத்த சொல்ல?’னு ஒருவர் பகிர்ந்து கொண்டார்.
திருநங்கை ஜீவா பேசும்போது, `நான் மேக்கப் துறையில் இருந்தப்ப நீ பெரிய ஆளா வரணும்மான்னு சொன்னார். அவருடைய பையன் அகிலனும், நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். சொந்த வீடு பலருக்கும் மிகப்பெரிய கனவு. அவருக்கும் அப்படித்தான். இப்ப தான் ஆசைப்பட்டு போரூர்ல சொந்த வீடு வாங்கியிருக்கார். அந்த வீட்டுக்கு போகிறதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. அவர் மறைவு நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு!” என்றார்.
ஊரில் இருந்து வந்திருந்த அவர் தங்கை ஒருவர் மாரிமுத்துவின் உடலைப் பார்த்து கதறி அழுது, `பால்காய்ச்சு வச்சிருக்கேன்.. வந்துடுன்னு சொல்லியிருந்தீயே அண்ணா… இப்படி அதுக்கு முன்னால போயிட்டீயே!’னு அழுத சப்தம் அங்கிருந்தவர்களை ஒரு நொடி உலுக்கியது.
அங்கிருந்த சின்னத்திரை பிரபலம் ஒருவர், “மாரிமுத்து சாருக்கு பத்தாண்டுகள் முன்பில் இருந்தே இதயத்தில் பிரச்னை இருந்திருக்கு. அவர் இதயத்தில் ஸ்டென்ட் வச்சிருக்காங்க. காலையில் டப்பிங் போகுறதுக்கு முன்னாடியே அவர் பையன்கிட்ட ஒரு மாதிரி நெஞ்சு எரிச்சலா இருக்குன்னு சொல்லிட்டுதான் போயிருக்கார். டப்பிங் பணிக்காக போனவர் இந்த மாதிரி திரும்பி வருவார்னு யாருமே எதிர்பார்க்கல. அவர் பொண்ணு விடாம தேம்பி, தேம்பி அழுதுட்டே இருக்காங்க. அவங்க குடும்பம் எப்படி இதிலிருந்து மீண்டு வரப் போறாங்கன்னு தெரியல’னு சொல்லி வருத்தப்பட்டார்
+ There are no comments
Add yours