சென்னை: சுசி கணேசன் இயக்கியுள்ள இந்தி படம், ‘தில் ஹே கிரே’ . வினீத் குமார் சிங், அக்ஷய் ஓபராய், ஊர்வசி ரவுதெலா உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இந்தியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரத்யேக காட்சியாக திரையிடப்பட இருக்கிறது. உலகளாவிய பிரீமியருக்கு முன், படத்துக்கான ஆடியோ டீஸர், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் பிரிதுல் குமாரால் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் சுசி கணேசன், ஊர்வசி ரவுதெலா, இணை தயாரிப்பாளர் மஞ்சரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சுசி கணேசனிடம் கேட்டபோது, ”இந்த ஆடியோ டீசர் சினிமா ஆர்வலர்களுக்குத் தனித்துவமான அனுபவத்தைக் கொடுக்கும் ” என்றார்.
+ There are no comments
Add yours