Motivation Story: `உங்க கனவை மறந்துடாதீங்க!’ – மந்திரமான மனைவியின் சொல்… 3 ஆஸ்கர் வென்ற ஆங் லீ! |motivation story from the life of director ang lee

Estimated read time 1 min read

விண்ணப்பத்தை அனுப்பிய கையோடு தன் கனவை ஆரம்பித்துவிட்டார். அமெரிக்கா, சீனாவைப்போல் இல்லை. திரைத்துறையில் அவர் போன்ற திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொட்டிக்கிடக்கும் தேசம். ஹாலிவுட்… அந்தப் பெயரே அவருக்கு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

1979. ஆங் லீ, அப்பா சொல்லச் சொல்லக் கேட்காமல் அமெரிக்காவுக்குப் போனார். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். நடிக்க வேண்டும், பெரிய நடிகனாக வேண்டும் என்பதுதான் ஆரம்பத்தில் அவருடைய லட்சியமாக இருந்தது. அதற்கு அவருக்குப் பெரும் தடையாக இருந்தது ஆங்கில மொழி. எவ்வளவு முயன்றும் அவரால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. “சரியா இங்கிலீஷ் வார்த்தையே வர மாட்டேங்குது. இதுல எப்பிடி நீ பெரிய வசனமெல்லாம் பேசி நடிப்பே… ஒரு டயலாக்குக்கு பத்து பதினைஞ்சு டேக் எடுத்தேன்னு வையி… நீ இங்கே நடிக்கவே முடியாது’’ என்று சக மாணவர்கள் பயமுறுத்தினார்கள். அது உண்மை என்றும் அவருக்குப் புரிந்தது. ஸ்கிரிப்ட், டைரக்‌ஷன் இவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அமெரிக்காவில், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான் ஒருநாள் ஜேன் லின்-ஐ (Jane Lin) சந்தித்தார் ஆங் லீ. பார்த்ததுமே பிடித்துப்போகும் சிநேகமான முக பாவம். எளிமை. ஜேன் லின்னும் தைவானைச் சேர்ந்தவர். தன்னுடைய முனைவர் பட்டப்படிப்புக்காக அவர் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு வந்திருந்தார். இருவரும் பேசினார்கள். பழகினார்கள். காதலித்தார்கள். திருமணமும் செய்துகொண்டார்கள்.

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தை முடித்தார் லீ. பிறகு, நியூயார்க்கில் இருக்கும் டிஸ்ச் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் (Tisch School of the Arts) சேர்ந்தார். அங்கே ஃபிலிம் புரொடக்‌ஷன் படிப்பில் MFA பட்டம் பெற்றார். படிப்பு முடிந்தது. வாழ்க்கை தன் கண்ணாமூச்சி விளையாட்டை ஆரம்பித்தது. அடுத்து… அடுத்து என்ன? இந்தக் கேள்வி ஆங் லீயைத் துரத்த ஆரம்பித்தது. படிப்பு முடிந்ததும் அவருக்கு திரைப்பட வாய்ப்பு தேடி வந்துவிடவில்லை. மாறாக கிடைத்த சினிமா சார்ந்த வேலைகளையெல்லாம் பார்க்கத் தொடங்கினார். டிஸ்ச் ஸ்கூலில் அவருடன் படித்தவர் ஸ்பைக் லீ (Spike Lee). அவர் தயாரித்த படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக பல வேலைகளைப் பார்த்தார். எடிட்டருக்கு அசிஸ்டன்ட், ஸ்கிரிப்ட் அசிஸ்டன்ட் என என்னென்னவோ வேலைகள்.

வேலையில்லாத அந்த நாள்களில் அப்பாவை நினைத்துக்கொண்டார் ஆங் லீ. அப்பா ஏன் தன்னை சினிமா கோர்ஸில் சேர வேண்டாம் என்று சொன்னார் என்பது புரிந்தது. அமெரிக்க திரையுலகில் ஓர் இளம் சீன மனிதனால் பெரிய வெற்றிகளைப் பெற முடியாது என்பதை அப்பா உணர்ந்திருந்தார் என்பதும் புரிந்தது. ஆனாலும், தன் கனவைக் கைவிடுவதற்குத் தயாராக இல்லை லீ.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours