இதற்கிடையில், நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியானது. மாரிமுத்து மறைந்த செய்தி கேட்டு, வேல ராமமூர்த்தி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மாரிமுத்து குறித்துப் பதிவிட்டிருந்தார். அவரும், மாரிமுத்துவும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததாகவும், அந்தப் படத்தில் இவருக்குச் சகோதரனாக மாரிமுத்து நடித்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வேல ராமமூர்த்தி, ஆதி குணசேகரனாக நடிப்பதற்குத் தேர்வாகி இருப்பதாக வருகிற செய்தி குறித்துத் தெரிந்துகொள்ள அவரிடமே பேசினோம்.
“என்கிட்ட சேனல் தரப்பிலிருந்து அந்தக் கேரக்டர் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. ஆனா, இப்ப நான் சினிமாவில் பிஸியா இருக்கிறேன். இப்பவும் ஒரு படப்பிடிப்பில்தான் இருக்கேன். சீரியலுக்கான நேரம் கொடுக்க முடியுமான்னு தெரியல. இந்த மாதம் 20-ம் தேதிக்கு மேல்தான் சினிமா ஷூட்டிங் முடியுது. அந்தத் தொடரில் நடிக்கிறதுக்கான பேச்சு வார்த்தை நடப்பது உண்மைதான். ஆனா, அது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கல!” என்றார்.
ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்தால் பொருத்தமாக இருக்குமா? உங்களுடைய கருத்துகளையும் மறக்காமல் பதிவிடுங்கள்!
+ There are no comments
Add yours