மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் குறிப்பிட்ட பகுதியைச் சொத்துக்களில் முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏற்கெனவே அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் மும்பையில் பல இடங்களில் வீடு, அலுவலகம் வாங்கி வாடகைக்கு விட்டுள்ளனர்.
தற்போது மீண்டும் மும்பை அந்தேரி வீர் தேசாய் ரோட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சிக்னேச்சர் என்ற கட்டடத்தில் அமிதாப் பச்சன் 21வது மாடியில் நான்கு அலுவலகங்களை வாங்கி இருக்கிறார். ஒவ்வொன்றும் 2099 சதுர அடி கொண்டதாகும். நடிகர் கார்த்திக் ஆர்யன், அதே கட்டடத்தில் நான்காவது மாடியில் ஓர் அலுவலகத்தை ரூ.10.09 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.

இதே நான்காவது மாடியில் நடிகை சாரா அலிகானும், அவரது தாயார் அம்ரிதா சிங்கும் சேர்ந்து ஓர் அலுவலகத்தை ரூ.9 கோடிக்கு வாங்கியிருக்கின்றனர். ஜூலை 11ம் தேதி இந்த சொத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours