மோடி நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை – பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை.!

Estimated read time 1 min read

சென்னை:

சென்னையில் இருந்து விமானம் மூலம் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறுகையில், மணிப்பூரில் நடைபெரும் மதகலவரம் குறித்த கேள்விக்கு மனித உரிமைகள் நிறைய நடக்குது. மேடைன் எனும் இந்து சமுதாயம் 50 சதவீதம் பேர் உள்ளனர். மாற்ற சமுத்தித்தினர் டார் கெட் பண்றா..

பர்மாவில் உள்ளவர்களுடன் சீனா ஆதரவுடன் நடைபெறுகிறது.  பிரதமர் மோடி அமெரிக்கா போவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தலைநகர் இம்பால் போய் பார்க்கவில்லை பிரதமர் உடனே போய் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும் என கூறினார்.  பாட்னாவில் நடைபெற்ற எதிர் கட்சிகள் கூட்டம் குறித்த கேள்விக்கு, ஒரு வாய்பிருக்கு எல்லாரும் சேர்ந்து வந்தா நரேந்திர மோடி பிரதமார இருந்த காலத்துல எதுவும் செய்யல., யார் நமக்கு ஒட்டு போடப்போரா நாங்களோ BJP க்கு இந்துத்துவாக்கு மறுமலர்ச்சி கொண்டு வர முயற்சி பண்ணினோம் கோயில்கள் அனைத்தும் வெளிவர முயற்சி பண்ணிக் கொடுத்தோம் ஜாதி, மதம் மற்றும் அனைத்து இந்துக்களையும் ஒற்றுமையாக முயற்சி செய்தோம்.

இந்து ஒற்றுமைக்காக பிஜேபிக்கு ஓட்டு கிடைக்கும் பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினார்கள் அப்படி ஏதும் உண்மை அல்ல மோடி எதுவும் நாட்டுக்கு செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்.  வெள்ளைக்காரர்கள் முஸ்லிம்கள் நமது கலாச்சாரத்தை கெடுத்து விட்டு சென்றனர். அதை மீட்பதற்கு மறுமலர்ச்சி ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என இந்துக்களிடம் எண்ணம் வந்துள்ளது அதற்காக நமக்கு ஓட்டு கிடைக்கும்.  மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க பெயர் வைப்பது குறித்த கேள்விக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க பாராளுமன்றத்தில் எல்லாம் முடிவு செய்யப்பட்டது பிரபுபட்டேல் என்னிடம் கூறினார். மதுரை விமான நிலைய திறப்பு விழா சமயத்தில் மேடையில் பிரபு பட்டேல் அறிவிக்க இருந்த நேரத்தில் அமைச்சராக இருந்த பா.சிதம்பரம் அறிவிக்க விடாமல் தடுத்து விட்டார்.

முத்துராமலிங்க தேவர் தேவர் என்பதை தவிர நாட்டுடைய விடுதலைக்காக போராடியவர் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர். எனக்கு அவர் பெயர் வைக்காதது வருத்தம். இன்னைக்கு ஆட்சியில் இருந்தாலும் யாரும் சப்போர்ட் பண்ண வில்லை திமுக, அதிமுக யாரும் ஆதரிக்கவில்லை. இவர்கள் கடிதம் கொடுத்தால் பாராளுமன்றத்தில் பேசி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன். ஒருவருக்கு ஒருவர் பொறாமையில் பேசி செயல் படுகின்றனர் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours