பள்ளிக்கு சென்ற 3 மாணவர்கள் மாயம்.!

Estimated read time 1 min read

சேலம்:

சேலம் அம்மாபேட்டை வையாபுரி தெருவில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பெரிய கிணறு தெரு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் இவரது மகன் கோகுல் (வயது 12), 7-ம் வகுப்பும், அதே பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் கார்த்திகேயன் (13) 8-ம் வகுப்பும், ராஜேந்திரன் மகன் தரண் (14) 9-ம் வகுப்பும் படித்து வருகின்றார்கள்.

இவர்கள் 3 பேரும் பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர்கள். மாலையில் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். அப்போது அவர்கள் 3 பேரும் இன்று பள்ளிக்கு வரவில்லை என கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் மாணவர்கள் காணவில்லை. இது குறித்து அம்மாபேட்டை போலீசில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours