ஆந்திர:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (24) என்பவர் தெனாலியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி துணிக் கடையில் வேலை செய்து வந்தார். அங்கு ஹர்ஷபிரியா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 8ஆம் தேதி குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஜூன் 6ஆம் தேதி இரவு 10 மணியளவில் தந்தையுடன் போனில் பேசிவிட்டு வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours