“சோலையும் பாலையாகிறது, காரணம் சாலை விபத்து” – போக்குவரத்து விதிமீறல்களைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.!
எதிர்பாராமல் நடப்பதே விபத்தாகும், ஆனால் இன்றைய காலகட்டங்களில் விபத்துக்கள் தெரிந்தே தான் நடக்கின்றன என்பதே உண்மை. தமிழகத்தில் கடந்த வருடம் மட்டுமே சுமார் 17,473 பேர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர், மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்துக்கள் குறித்து போதிய பொறுப்பும் விழிப்புணர்வும் இல்லாத காரணத்தினால் மட்டுமே அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன.
கை மீறும் இந்த விபத்துக்களை கண்டும் காணாமல் இருந்தால் நாளடைவில் அது மிகவும் விபரீதத்தை ஏற்படுத்தும். விபத்துக்கள் பல காரணங்களினால் ஏற்படுகின்றன அதில் ஒரு சிலவற்றை இப்பதிவில் காண்போம்.!
இன்றைய காலகட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் பொழுது ஒரு சிலர் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதாக தெரியவில்லை. குறிப்பாக 90% பொதுமக்கள் கடைப்பிடிக்கவில்லை என்பதே தெரியவருகிறது. இதனால், அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இருப்பதாக தெரியவில்லை.
வளைவதற்கு ஒரு 30/50 மீட்டர் முன்னதாகவே குறிகாடிகளை (இன்டிகேட்டர்களை) பயன்படுத்துவதே முறை, ஆனால் இங்கு வளையும் பொழுது தான் இண்டிகேட்டர்களை பயன்படுத்துகிறார்கள் என்பதே வெளிச்சம்ஆகிறது. குறிப்பாக சில வாகன ஓட்டிகள் தங்களது கைகளையே இன்டிகேட்டரகளாக பயன்படுத்தும் அவலம் இங்கே நிறைய நடக்கின்றன, அதாவது நிறைய பாடி லாங்குவேஜ்யை செய்கிண்டார்களாம் .
இதனை கருத்தில் கொண்டு வாகன ஓட்டிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு விபத்துகளை அறவே ஒழிக்க வேண்டும்.
“நோய் வருவதற்கு முன்னே அறிகுறியானது வந்தால், நிச்சயமாக அந்த நோய் வராமல் தடுக்க முடியும்! ஆனால் அறிகுறியும் நோயும் சேர்ந்தே வந்தால் எப்படி தடுக்க முடியும்” என்று அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
தொடர் சம்பவங்கள் அனைத்தையும் பார்க்க போனால் இவர்கள் அனைவருக்கும் முறையான ஓட்டுநர் உரிமம் எப்படி வழங்கப்பட்டது என்பது அனைவரிடையே சந்தேகத்தை எழுப்புகிறது. தேசிய மற்றும் மாநில சாலை ஓரங்களில் இருக்கும் எச்சரிக்கை பலகைகளின் மீது கட்சி கொடிகள் மற்றும் ரியல் எஸ்டேட் பேனர்கள் கட்டி மூடப்பட்டு கடந்த வாரம் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், விபத்துக்கள் குறித்து கடுமையான விழிப்புணர்வு மற்றும் விதி மீறல்கள் செய்யும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் எமது வேண்டுகோளாக இருக்கிறன.
ஐ பி டி தமிழ் செய்திகளுக்காக -முள்ளு
+ There are no comments
Add yours