சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்தின் மோஷன் போஸ்டர் டைட்டில் நாளை காலை வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘சிறுத்தை’ சிவாவின் இயக்கத்தில் சூர்யா இப்போது நடித்து வரும் ‘சூர்யா 42’ பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் டைட்டிலாக தூய தமிழ்ப்பெயர் ஒன்று இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் படத்தின் தலைப்பு என ஒரு டைட்டில் வெளியாகி உள்ளது.

நாளை வெளியாக உள்ள மோஷன் போஸ்டர் டைட்டில் அனிமேஷன் வீடியோவை சின்னத்திரையிலும் ஒளிபரப்புவதால் அந்த வீடியோவை சென்சார் செய்திருக்கின்றனர். அதில் இடம் பெற்றுள்ள ‘கங்குவா’ ‘KANGUVA’ என்ற தலைப்புதான் ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பு என்கின்றனர்.
கிட்டத்தட்ட இதே பெயரில் ரஜினிகாந்த், ஷபானா ஆஸ்மி நடிப்பில் 1984ல் வெளியான ஹிந்தி படத்தின் டைட்டில் ‘gangvaa’. இது தமிழில் வெற்றிபெற்ற ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தின் இந்தி ரீமேக். கங்குவா தான் சூர்யா படத்தின் தலைப்பா அல்லது வேறு ஏதுவும் வைக்கப்பட்டிருக்கிறதா என்பது நாளை காலை உறுதிப்பட தெரிந்துவிடும்.
+ There are no comments
Add yours