தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது நடிகையாக வளர்ந்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் எஸ்.ஜி சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி படம் வெளியாகி உள்ளது. சொப்பன சுந்தரி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீபா சங்கர், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஷ ரா, கருணாகரன், சதீஷ் கிருஷ்ணன், சுனில் ரெட்டி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் & ஹம்சினி என்டர்டெயின்மென்ட் உடன் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர். விஷால் சந்திரசேகர் பின்னணி இசையமைக்க, அஜ்மல் தஹ்சீன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும் படிக்க | இயக்குநர் லிங்குசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி! சென்னை நீதிமன்றம் தீர்ப்பு
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது அக்கா லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி இவர்களது அம்மா தீபா சங்கருடன் சென்னையில் வசித்து வருகின்றனர். ஏழ்மையின் காரணமாக லக்ஷ்மி பிரியாவிற்கு திருமணம் ஆகாமல் உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நகைக்கடையில் வேலைபார்த்து குடும்பத்தை சமாளித்து வருகிறார். இந்த சமயத்தில் இவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள ஒரு கார் பரிசாக கிடைக்கிறது. இதை வைத்து தனது அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று யோசிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த சமயத்தில் இவரது அண்ணன் கருணாகரன் அந்த கார் தனக்கு தான் சொந்தம் என்று பிரச்னை செய்கிறார். இதனால் கார் போலீசிடம் சிக்கி கொள்கிறது. இறுதியில் அந்த காரை வெளியில் எடுத்தார்களா? அந்த காருக்குள் என்ன இருந்தது என்பது தான் சொப்பன சுந்தரி படத்தின் கதை.
காமெடி மற்றும் எமோஷன் மிகுந்த இந்த கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கச்சிதமாக பொருந்தி உள்ளார். பணத்திற்கு கஷ்டப்படும் ஒரு மிடில் பெண்ணாக சிறப்பாக நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் லக்ஷ்மி பிரியா தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மறுபுறம் வழக்கம் போல காமெடியில் தீபா சங்கர் கலக்கி உள்ளார். இவரது வசனங்களுக்கு பல இடங்களில் கைதட்டுகள் பறக்கிறது. சில காட்சிகளே வந்தாலும் ரெடின் கிங்ஸ்லி அசத்தியுள்ளார். டாக்டர் தொடங்கி பீஸ்ட் வரை காமெடி கதாபாத்திரத்தில் அசத்திய சுனில் ரெட்டி இந்த படத்தில் ஒரு டெரரான போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார். பல இடங்களில் நன்றாகவே நடித்துள்ளார். கருணாகரன், மைம் கோபி, ஷ ரா, சதீஷ் கிருஷ்ணன் அந்தந்த கதாபாத்திரத்தில் அசத்தி உள்ளனர்.
பாலமுருகன் & விக்னேஷ் ராஜகோபாலன் என இரண்டு பேர் சொப்பன சுந்தரி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஆனால் கதைக்கும் ஒளிப்பதிவிற்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளது. பல இடங்களில் தேவையே இல்லாமல் குளோசப் காட்சிகள் வந்து செல்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை மற்றும் அஜ்மல் தஹ்சீன் படங்கள் ஓகே வாக உள்ளது. அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்பட்டால் என்ன நடக்கும் என்பதை காமெடி கலந்த திரைக்கதையில் கொடுக்க முயற்சி செய்து அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ளார் எஸ்.ஜி சார்லஸ். சொப்பன சுந்தரி என்ற டைட்டிலும் படத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது. படத்தில் ஆங்காங்கே வரும் சில திருப்பங்களும் ரசிக்கும் படியாக இருந்தது. குடும்பத்தினருடன் சேர்ந்து ஜாலியாக பார்க்கும் படம் சொப்பன சுந்தரி.
மேலும் படிக்க | 26 வயது நடிகை உயிரிழப்பு… துக்கத்தில் கொரியன் சீரிஸ் ரசிகர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours