Vishakha Singh: நடிகை விசாகா சிங் மருத்துவமனையில் அனுமதி; வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு! | Santhanam film heroine Vishakha Singh hospitalized suddenly

Estimated read time 1 min read

தமிழில் சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை விசாகா சிங். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்துவருபவர். திரைப்பட நடிகையாக மட்டுமன்றி ஃபேஷன் டிசைனிங் பணிகளிலும் பணியாற்றி வருபவர். இவர் தனது இன்ஸ்டாகிராமில் தான் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், “நான் நீண்ட நேரம் இப்படிப் படுத்த படுக்கையாக, ஓய்விலேயே இருக்கமுடியாது. சில பல சம்பவங்கள், விபத்துகள் தாண்டி, அந்தந்த சீசனில் அடிக்கடி வரும் உடல்நலக் குறைவுதான் இது. ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இந்தக் கோடைக் காலத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளேன். எப்போதும் ஏப்ரல்தான் எனக்குப் புது வருடம்போல உள்ளது. ஒருவேளை இது புதிய நிதி ஆண்டு என்பதாலா, அல்லது என் பிறந்தநாளுக்கு முந்தைய மாதம் என்பதாலா? உடல்நலனைப் பாதுகாக்க உறுதியெடுத்து முன்னே செல்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours