சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் திரையில் வெளிவந்து ஓராண்டு நிறைவாகி உள்ளது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ‘வீர ராகவன்’ என்ற பெயரில் ‘ரா’ ஏஜெண்டாக விஜய் நடித்திருந்தார்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் வெளிவந்திருந்தது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதீஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார். சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவானது. மால் ஒன்றில் இருக்கும் மக்களை பயங்கரவாதிகள் பிணை வைத்திருப்பார்கள். மக்களில் ஒருவராக நடிகர் விஜய் இருப்பார். மக்களை அவரை எப்படி காத்தார் என்பதுதான் கதை.
+ There are no comments
Add yours