இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பல ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு ‘கப்பார்’ என்று பெயர் பெற்ற, ஷிகர் தவான் தனது மனைவியை பிரிந்து வாழ்வதாக சில மாதங்கள் முன்பு தகவல்கள் வெளிவந்தன. சில மாதங்களுக்கு முன்பு தனது திருமண முரண்பாடு காரணமாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். தவான் தனது மனைவி ஆயிஷா முகர்ஜியிடமிருந்து நீண்ட காலத்திற்கு முன்பே பிரிந்திருந்தாலும், தவான் சமீபத்தில்தான் அதுகுறித்து உடைத்து பேசியிருக்கிறார். தற்போது வைரலாகோ வர ஒரு வீடியோ மேலும் புயலை கிளப்பி வருகிறது. அதில் தவான் மீண்டும் காதலில் விழுந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். ரகசியமாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், ஆர்கே என்று அழைத்து ஒரு நபருக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு பேச அமர்கிறார்.
யார் இந்த நபர்?
அமர்ந்ததும் ஆர்கே என்பவர், முன்பு ஒருவரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தீர்களே, அவரைப்பற்றி விளக்கமாக கூறும்படி இந்தியில் கேட்கிறார். அதற்கு பதிலளித்த ஷிகர் தவான் பேசும்போது, ’என் வாழ்க்கை மிகவும் மோசமாக சென்றுகொண்டிருந்தது, பின்னர் ஒரு கட்டத்தில் எல்லாம் மாறியது’, என்றார். அதற்கு ஆர்கே, “ஆமாம், நீங்கள் டெல்லியில் இருந்தீர்கள், அரோராவுக்குச் சென்றீர்கள், அது அங்கே நடந்தது!” என்றார். அதற்கு தவான், “ஆம், அது அவரது பண்ணை வீடு, அப்போதுதான் நாங்கள் அங்கு முதலில் சந்தித்தோம்”, என்கிறார்.
கண்டதும் காதல்
“லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ என்பார்களே அந்த தருணமா?” என்று ஆர்கே கேட்க, தவான், “கண்டிப்பா, வாழ்க்கையில் இதுபோன்ற தெளிவை நான் அனுபவித்ததில்லை. நான் பார்த்துவிட்டு அப்படியே மாட்டிக்கொண்டேன். அப்படி ஒரு அழகு வேறு யாரும் இல்லை. ஈர்க்கும் அழகு” என்று கூறுவதோடு வீடியோ ஃபார்வேர்டு செய்யப்படுகிறது. தவான் ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ என்று உறுதியாக கூறும் இடம் மட்டும் இன்னொருமுறை அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறது.
கடந்த காலத்தை விட்டு கடக்கவேண்டிய நேரம்
பின்னர் தொடரும் தவான், “என்னை அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இரண்டு நாட்களாக வீட்டில் ஒன்றாக இருந்தோம். அவரோடு எல்லாம் ஒத்துப்போகும் என்ற நிலை உருவான பிறகு, காத்திருக்க எந்த காரணமும் இல்லை. கடந்த காலத்தை விட்டுவிட்டு, முன்னேற வேண்டிய நேரம் இதுதான்.” என்று தீர்க்கமாக கூறுகிறார். தவான் எந்த ‘காதல்’ பற்றி பேசினார் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை தூண்டியுள்ளது.
Love has struck Shikhar Dhawan again after moving on, and it’s official! ShikharDhawan ViralVideo pic.twitter.com/7D2RFljykM
— Rajib (@Rajibsingha_) April 11, 2023
பிரிந்த தவான் – ஆயிஷா
முன்னதாக ஒரு நேர்காணலில், தவான் தனது தோல்வியுற்ற திருமணம் குறித்து திறந்து பேசியபோது, அவர் தனது சொந்த முடிவுகளை எடுத்ததால் வேறு யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என்று கூறினார். மேலும், தவான் மறுமணம் குறித்தும் பேசியுள்ளார், எனது வாழ்க்கையை எந்த வகையான பெண்ணுடன் செலவிட விரும்புகிறார் என்பதை என்னால் அடையாளம் காண முடியும் என்று கூறினார். தவான், மெல்போர்னைச் சேர்ந்த அமெச்சூர் கிக்பாக்ஸர் ஏஷா முகர்ஜியை 2012-இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் ஏற்கனவே இரண்டு மகள்கள் இருந்தனர். 2014-இல் தவான் மற்றும் ஆஷாவிற்கு ஜோராவர் என்ற மகன் பிறந்தார். இருவரும் செப்டம்பர் 2021 இல் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours