2
லாஸ்ஏஞ்சல்: அமெரிக்காவை சேர்ந்த டைம்ஸ் இதழ் ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்காக தங்களின் வாசகர்களிடம் பிரத்தியேகமாக வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான வாக்கெடுப்பின் ரிசல்ட்டை வெளியிட்டுள்ளது டைம்ஸ் இதழ். இதில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சியை விட இந்தியாவின் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்த வாக்கெடுப்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றன.
இந்த பட்டியலில் டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற பலர் இடம்பெற்றுள்ளனர். இவர்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி ஷாருக்கான் முதலிடம் பிடிக்க பதான் படம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஷாருக்கான், பதான் என்ற ஒரே படம் மூலம் இந்த ஆண்டு லைம்லைட்டுக்கு திரும்பினார். இந்த படத்தால் முதல் முறையாக பாலிவுட் படத்தினை 1000 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையையும் படைக்க வைத்திருக்கிறார்.
+ There are no comments
Add yours