‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. இப்போது, பிஎஸ்-2வின் திரையரங்கு வெளியீடு கூடுதல் சிறப்பு பெற்றது, ஏனெனில் இந்த திரைப்படம் ‘4DX’ வடிவத்திலும் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 4DX என்பது தியேட்டர் இருக்கைகளில் மாற்றும் மற்றும் மிகவும் அட்வான்ஸ் தொழில்நுட்பமாகும். இது வளைந்து கொடுக்கக்கூடிய இருக்கைகள், காற்று, நீர் தெளிப்பான்கள் (மழை), ஸ்ட்ரோப் விளக்குகள், செயற்கை பனி மற்றும் வாசனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளுடன் சேர்ந்து திரைப்படங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க | இனி வேற ரகம்! தனுஷ் நடிக்கும் அடுத்த 7 படங்களின் அப்டேட் இதோ!
ஆனால் இந்த வடிவத்தில் பொன்னியின் செல்வன் 2ஐ பார்க்க இந்தியாவில் மிகக் குறைந்த திரைகளே உள்ளன. தற்சமயம், தமிழ்நாட்டில் எந்த திரையிலும் 4DX அம்சங்கள் பொருத்தப்படவில்லை, ஏனெனில் டிக்கெட் விலையில் அரசாங்கத்தின் வரம்பு உள்ளது. மல்டிபிளெக்ஸ்கள் டிக்கெட் விலையின் உச்சவரம்பு அகற்றப்படாமல் மேம்படுத்தவோ அல்லது புதிய வடிவங்களை அறிமுகப்படுத்தவோ முடியாது. எனவே, மல்டிபிளக்ஸ் திரைகளில் PS2ஐ 4DXல் பார்க்க, தமிழக மக்கள் பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் அல்லது ஹைதராபாத் செல்ல வேண்டும்.
#PS2 will be the 1st South Indian Movie to rech it in your nearest #4ome experience of the world of #Ponncinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholasAreBack… pic.twitter.com/I3NwsD4SGH
— Lyca Productions (@LycaProductions) April 11, 2023
பொன்னியின் செல்வன் 2 படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார், எழுத்தாளர் கல்கியின் காவிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மிகசிறந்த வரலாற்று படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், பிரபு, அஷ்வின், சரத்குமார், மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை புயல் ஏஆர் ரஹ்மான் இசையில், பிஎஸ்-2 தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஏப்ரல் 28 அன்று திரைக்கு வர உள்ளது. ஏப்ரல் 21ம் தேதி பிஎஸ்-1 படத்தை மீண்டும் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | விடுதலை பார்ட் 2-க்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்! வெளியாவதில் சந்தேகம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours