‘ஜிகர்தண்டா 2’ படத்துக்காக பழங்கால தியேட்டர் அரங்கம்! | old theater set for Jigarthanda 2 film shooting schedule

Estimated read time 1 min read

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘ஜிகர்தண்டா’. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்காக, பாபி சிம்ஹா தேசிய விருது பெற்றார். இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகிறது. ராகவா லாரன்ஸ் நாயகனாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கின்றனர். நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்குத் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ், தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்தின் 58 நாட்கள் படப்பிடிப்பு மதுரை அருகே நடந்து முடிந்துவிட்டது.

வரும் 14ம் தேதி முதல் சென்னையில் இதன் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக, மதுரை டவுண் ஹால் செட், பழங்கால திரையரங்க செட் அமைக்கப்பட்டு வருகிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours